சிங்கோலி (Chingoli) இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் கார்த்திகப்பள்ளி வட்டத்தில் ஹரிப்பாடு அருகே அமைந்துள்ள ஒரு நகர்ப்புற கிராமமாகும். இது நவீன நகர வாழ்க்கை முறை மற்றும் கேரளாவின் பாரம்பரிய மதிப்புகள் இரண்டின் கலவையாகும். இந்த கிராமத்தில் தன்னியக்க வங்கி இயந்திர வசதிகள், வாகன வசதிகள், ஆயுர்வேத மருத்துவமனைகள், பல் மருத்துவமனைகள், சிறு வணிக வளாகங்கள் போன்றவை உள்ளன.

போக்குவரத்து

தொகு

சிங்கோலியை சாலை மற்றும் இரயில் மூலம் அணுகலாம். அருகிலுள்ள பெரிய பேருந்து நிலையமான ஹரிபாடு சுமார் 4–5 ஆகும் கி.மீ தூரத்திலும், அருகிலுள்ள தொடர்வண்டி நிலையமான ஹரிபாடு ரயில் நிலையம் 5 கி.மீ தூரத்திலும் உள்ளது. 

மாநிலத்திற்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கு, கொச்சின் விமான நிலையம் (117 கி.மீ), திருவனந்தபுரம் விமான நிலையம் (116 கி.மீ), ஆலப்புழா தொடருந்து நிலையம் (35 கி.மீ) ஆகியவை அணுகலுக்கான முக்கிய முக்கிய இடங்களாகும்.

ஆர்வமுள்ள இடங்கள்

தொகு

சிங்கோலி கிராமத்தில் பல இந்து கோவில்கள் உள்ளது. அவற்றில் மன்னார் சாலை நாகராஜன் கோயில், ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில், எவூர் கிருட்டிணசாமி கோயில், கஞ்சூர் துர்கா தேவி கோயில், வெட்டிகுளங்கரா தேவி கோயில் ஆகியவை மிகவும் பிரபலமானவை. கவில்பாடிக்கல் கோயில், மாரியம்மன் கோயில், புவனேசுவரி தேவி கோயில் ஆகியவை கிராமத்தின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும்.

தொழிற்சாலைகள்

தொகு

காயங்குளம் தேசிய அனல் மின் நிறுவனம் சிங்கோலிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் பிராந்திய அளவிலான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துகிறது. சிறீ இராம கிருட்டிணா மருந்தகம் மற்றும் சிங்கோலி ஆயுர்வேத மருத்துவமனை என அழைக்கப்படும் 1908 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆயுர்வேத மருத்துவமனை ஆயுர்வேத சிகிச்சைகளுக்காக இந்தியர்களையும் வெளிநாட்டினரையும் ஈர்க்கிறது. [1]

குறிப்புகள்

தொகு
  1. "Sree Ramakrishna Pharmacy-Karthikappally-Kerala | National Health Portal Of India". www.nhp.gov.in. Archived from the original on 2020-10-22. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கோலி&oldid=4089833" இலிருந்து மீள்விக்கப்பட்டது