லோபோசெரோசு

லோபோசெரோசு
கொண்டை இருவாய்ச்சி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
புசெரோடிபார்மிசு
குடும்பம்:
புசோரோடிடே
பேரினம்:
லோபோசெரோசு
மாதிரி இனம்
லோபோசெரோசு நாசூடசு ஆப்பிரிக்க சாம்பல் இருவாய்ச்சி
(லின்னேயஸ், 1766)
சிற்றினம்

உரையினை காண்க

லோபோசெரோசு (Lophoceros) என்பது ஆப்பிரிக்கா பூர்வீகமாகக் கொண்ட புசெரோடிடே என்ற இருவாய்ச்சி குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளின் பேரினமாகும்.

வகைப்பாட்டியல்

தொகு

1833ஆம் ஆண்டில் ஜெர்மன் இயற்கை ஆர்வலர்கள் வில்கெல்ம் கெம்ப்ரிச் மற்றும் கிறிசுடியன் காட்பிரைட் எக்ரன்பெர்க் ஆகியோரால் புசெரோசு, லோபோசெரோசு மற்றும் போர்சுகாலி ஆகிய பேரினங்களுக்கு இடமளிக்க லோபோசெராசு என்ற பேரினம் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இது இப்போது ஆப்பிரிக்கச் சாம்பல் இருவாய்ச்சி (லோபோசெரோசு நாசூடசு நாசூடசு) என்ற பெயரிடப்பட்ட துணையினத்தின் இளைய ஒத்த பெயராகக் கருதப்படுகிறது.[2] இந்தப் பேரினத்தின் பெயர் "முகடு" என்று பொருள்படும் பண்டைய கிரேக்க லோபோசு மற்றும் "கொம்பு" என்று பொருள்படும் கெரோசு என்ற சொற்களிலிருந்து ஒருங்கிணைத்து உருவானது.[3]

இப்போது இந்தப் பேரினத்தில் கீழ் உள்ள சிற்றினங்கள் முன்பு டோக்கசு பேரினத்தில் சேர்க்கப்பட்டன. 2013ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு மூலக்கூறு இனவரலாறு ஆய்வில், டோக்கசு ஒரு விரிவாகன தொகுதித் தோற்ற பிளவால் இரண்டு முக்கிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டது. எனவே இந்தக் குழுக்களில் ஒன்றைக் கொண்டிருக்க லோபோசெரோசு பேரினம் தோற்றுவிக்கப்பட்டது.[4][5]


சிற்றினங்கள்

தொகு

இந்தப் பேரினத்தில் 8 சிற்றினங்கள் உள்ளன.[5]

படம் விலங்கியல் பெயர் பொதுவான பெயர் பரவல்
  லோபோசெரோசு அல்போடெர்மினடசு கொண்டை இருவாய்ச்சி வடகிழக்கு ஆப்பிரிக்கா
  லோபோசெரோசு பிராட்பீல்டி பிராட்பீல்டு இருவாய்ச்சி வடக்கு போட்ஸ்வானா, தெற்கு அங்கோலா மற்றும் கிழக்கு ஜிம்பாப்வே
  லோபோசெரோசு பாசியடசு காங்கோ கருப்பு வெள்ளை இருவாய்ச்சி நைஜீரியா முதல் வடக்கு அங்கோலா மற்றும் உகாண்டா வரை
  லோபோசெரோசு செமிபாசுகியாட்டசு மேற்கு ஆப்பிரிக்க கருப்பு வெள்ளை இருவாய்ச்சி செனிகல், காம்பியாவிலிருந்து தெற்கு நைஜீரியா வரை
  லோபோசெரோசு கெம்பிரிச்சி கெம்பிரிச்சி இருவாய்ச்சி ஜிபூட்டி, எரித்திரியா, எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் உகாண்டா
  லோபோசெரோசு பாலிடிரோசுட்ரிசு வெளிறிய அலகு இருவாட்சி அங்கோலா, டி. ஆர். சி, கென்யா, மலாவி, மொசாம்பிக், தன்சானியா மற்றும் சாம்பியா
  லோபோசெரோசு நாசூடஸ் ஆப்பிரிக்க சாம்பல் இருவாய்ச்சி துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் அரேபியாவில்
  லோபோசெரோசு கேமூரசு செவ்வலகு குள்ள இருவாட்சி அங்கோலா, பெனின், கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காங்கீ மக்களாட்சிக் குடியரசு, ஐவரி கோஸ்ட், ஈக்வடோரியல் கினி, காபோன், கானா, கினி, லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் உகாண்டா.

மேற்கோள்கள்

தொகு
  1. Hemprich, Wilhelm; Ehrenberg, Christian Gottfried (1828). Symbolae physicae (in Latin). Vol. 1: Avium Part 1. Berolini [Berlin]: Ex Officina Academica. Pages are not numbered. Text and Note 8.{{cite book}}: CS1 maint: unrecognized language (link) Although the year 1828 is printed on the title page, the volume was not published until 1833. See: Dickinson, E.C.; Overstreet, L.K.; Dowsett, R.J.; Bruce, M.D. (2011). Priority! The Dating of Scientific Names in Ornithology: a Directory to the literature and its reviewers. Northampton, UK: Aves Press. pp. 91–92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9568611-1-5.
  2. Dickinson, E.C.; Remsen, J.V. Jr., eds. (2013). The Howard & Moore Complete Checklist of the Birds of the World. Vol. 1: Non-passerines (4th ed.). Eastbourne, UK: Aves Press. p. 283, Note 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9568611-0-8.
  3. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  4. Gonzalez, J.-C.T.; Sheldon, B.C.; Collar, N.J.; Tobias, J.A. (2013). "A comprehensive molecular phylogeny for the hornbills (Aves: Bucerotidae)". Molecular Phylogenetics and Evolution 67 (2): 468–483. doi:10.1016/j.ympev.2013.02.012. பப்மெட்:23438388.  See also the correction: Gonzalez, J.-C.T.; Sheldon, B.C.; Collar, N.J.; Tobias, J.A. (2013). "Corrigendum to "A comprehensive molecular phylogeny for the hornbills (Aves: Bucerotidae)" [Mol. Phylogenet. Evol. 67 (2013) 468–483]". Molecular Phylogenetics and Evolution 68 (3): 715. doi:10.1016/j.ympev.2013.05.008. 
  5. 5.0 5.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2022). "Mousebirds, Cuckoo Roller, trogons, hoopoes, hornbills". IOC World Bird List Version 12.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 10 June 2022.

வார்ப்புரு:Cavitaves

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோபோசெரோசு&oldid=4013827" இலிருந்து மீள்விக்கப்பட்டது