லோரண்ட் பாக்போ

லோரண்ட் கூடோ பாக்போ (Laurent Koudou Gbagbo, பிறப்பு: மே 31, 1945) கோட் டிவாரின் (ஐவரி கோஸ்ட்) அரசியல்வாதி. இவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2011, ஏப்ரல் 11 இல் பிரெஞ்சுப் படைகள் அவரை கைது செய்யும் வரை கோட் டிவாரின் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.

லோரண்ட் பாக்போ
Laurent Gbagbo
IC Gbagbo Motta eng 195.jpg
கோட் டிவாரின் 3வது அரசுத்தலைவர்
பதவியில்
26 அக்டோபர் 2000 – 4 டிசம்பர் 2010*
முன்னவர் ராபர்ட் கூவெய்
பின்வந்தவர் அலசான் வட்டாரா
தனிநபர் தகவல்
பிறப்பு 31 மே 1945 (1945-05-31) (அகவை 77)
காக்னோ, பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா (தற்போதைய ஐவரி கோஸ்ட்)
அரசியல் கட்சி ஐவரிய வெகுசன முன்னணி
வாழ்க்கை துணைவர்(கள்) சிமோன் பாக்போ
படித்த கல்வி நிறுவனங்கள் பாரிஸ் டிடெரோ பல்கலைக்கழகம்
இணையம் அதிகாரபூர்வ இணையத்தளம்
*பாக்போவுக்கும் அலசான் வட்டாராவுக்கும் இடையில் அரசுத்தலைமை தொடர்பாக 2 திசம்பர் 2010 முதல் 11 ஏப்ரல் 2011 வரை சர்ச்சை இருந்து வந்தது.

வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றி வந்த பாக்போ, அந்நாலைய அரசுத்தலைவர் பெலிக்ஸ் கூபயோ-பொய்னியின் அரசியல் எதிரியாகச் செயல்பட்டவர். 1982 ஆம் ஆண்டில் ஐவரிய வெகுசன முன்னணி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். 1990 இல் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ராபர்ட் குவெய் என்பவர் இராணுவப் புரட்சி ஒன்றை நிகழ்த்தி ஏனைய முக்கிய அரசியல் தலைவர்கள் போட்டியிட முடியாமல் தடை செய்த அக்டோபர் 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில், பாக்போ வெற்றி பெற்றதாக அறிவித்து, அவரது ஆதர்வாளர்கள் வீதிகளில் இறங்கி வன்முறைகளில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ராபர்ட் குவெய் பதவியில் இருந்து அகற்றப்பட்டு பாக்போ அரசுத் தலைவரானார்.

நவம்பர் 2010 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் அலசான் வட்டாரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவருக்கு ஐநா உட்படப் பல உலக நாடுகளின் ஆதரவு இருந்தது. ஆனாலும், தனது பதவியில் இருந்து பாக்போ இறங்க மறுத்து தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்தார். இதனை அடுத்து பாக்போவுக்கு ஆதரவான படைகளுக்கும், வட்டாராவுக்கு ஆதரவானவர்களுக்கும் இடையில் சண்டை மூண்டது. 2011 ஏப்ரல் 11 ஆம் நாள் பிரெஞ்சு இராணுவத்தினரின் தாக்குதலை அடுத்து பாக்போ சரணடைந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோரண்ட்_பாக்போ&oldid=3538004" இருந்து மீள்விக்கப்பட்டது