லோரிங் எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தல்லோமைசு
இனம்:
த. பேதுல்கசு
இருசொற் பெயரீடு
தல்லோமைசு லோரிங்கி
(கெல்லர், 1909)

லோரிங் எலி (தல்லோமைசு லோரிங்கி) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும்.இது கென்யாவிலும் தான்சானியாவிலும் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், வறண்ட புன்னிலம் மற்றும் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டலம் வறண்ட புதர் நிலங்கள் ஆகும்.

இந்த சிற்றினம் ஜான் ஆல்டன் லோரிங் பெயரால் அழைக்கப்படுகிறது.[1]

வகைபிரித்தல்

தொகு

சுமித்சோனியன்-ரூசுவெல்ட் ஆப்பிரிக்கப் பயணத்தின் போது இந்த சிற்றினத்திற்கான நிறைவகையினை லோரிங் கைப்பற்றினார். எட்மண்ட் கெல்லர் சிற்றினம் குறித்த விளக்கத்தில் இதனை தாம்னோமைசு பேரினத்தில் வைத்தார்.[2][3] 1923ஆம் ஆண்டில், ஓல்டுபீல்டு தாமசு மற்றும் மார்ட்டின் கிண்டன் ஆகியோர் இதை தல்லோமைசு பேரினத்திற்கு மாற்றினர்.[4]

பின்னர் இது நெட் கோலிசுடர், குளோவர் மோரில் ஆலன் மற்றும் ஜான் எல்லர்மேன் ஆகிய ஒவ்வொருவரும் செய்ததைப் போல அல்லது பிரான்சிசு பெட்டர் வகைப்படுத்தியதைப் போல தல்லோமைசு டேமரென்சிசு என்ற துணையினமாக வகைப்படுத்தப்பட்டது. 1993ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் பாலூட்டி இனங்களின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டுடன், கை முசர் மற்றும் கார்லெட்டனின் வகைப்பாட்டின் காரணமாக த. லோரிங்கி மீண்டும் தனிச் சிற்றினமாகக் கருதப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Grayson, Michael; Beolens, Bo; Watkins, Michael (2009). "Loring". The Eponym Dictionary of Mammals. Baltimore: Johns Hopkins University Press. pp. 246–247. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-9533-3.
  2. Heller, Edmund (1910). "Two new rodents from British East Africa". Smithsonian Miscellaneous Collections 52: 471–472. https://www.biodiversitylibrary.org/page/8812964. 
  3. Roosevelt, Theodore (1910). African Game Trails. London: John Murray. pp. 490, 495–496.
  4. Thomas, Oldfield; Hinton, Martin A. C. (1923). "On Mammals collected by Captain Shortridge during the Percy Sladen and Kaffrarien Museum Expedition to the Orange River". Proceedings of the Zoological Society of London 93 (3): 493. doi:10.1111/j.1096-3642.1923.tb02194.x. https://www.biodiversitylibrary.org/page/31195032. 
  5. Carleton, Michael D. (2013). "Thallomys loringi Loring's Acacia Rat (Loring's Thallomys)". In Happold, David (ed.). Rodents, Hares and Rabbits. Mammals of Africa. Vol. 3. London: Bloomsbury. pp. 558–559.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோரிங்_எலி&oldid=3922741" இலிருந்து மீள்விக்கப்பட்டது