லோவ்லினா போர்கோஹைன்
லோவ்லினா போர்கோஹைன் (Lovlina Borgohain (பிறப்பு: 2 அக்டோபர் 1997) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கோலாகாட் நகரத்தைச் சேர்ந்த பெண் குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர் 2020-ஆம் ஆண்டில் அருச்சுனா விருது வென்றார்.[1][2]இவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டைப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெர்ட்ஸ் மற்றும் தைவான் நாட்டின் சென் நயின் சிங்கை வென்று பதக்கப் பட்டியலில் இடம் பெற்றார்.[3][4][5]
புள்ளிவிபரம் | |
---|---|
பிரிவு | 69 கிலோ |
உயரம் | 1.78 மீட்டர் |
தேசியம் | இந்தியர் |
பிறப்பு | 2 அக்டோபர் 1997 |
பிறந்த இடம் | கோலாகாட், அசாம், இந்தியா |
2020 தோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்
தொகு2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 69 கிகி பிரிவில் 2021 ஆம் ஆண்டு ஆகத்து 4 அன்று நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் துருக்கியின் புசேனாஸ் சுர்மீனெலி என்பவரிடம் தோற்றார். இருப்பினும் இவர் இப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துடன் நிறைவு செய்தார். விஜேந்தர் சிங் மற்றும் மேரி கோம் ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரானார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ List of National Sports Award winners 2020
- ↑ Assam Boxer Lovlina Borgohain receives Arjuna Award
- ↑ டோக்யோ ஒலிம்பிக்: அரையிறுதி போட்டிக்கு சென்ற லவ்லீனாவுக்கு பதக்கம் உறுதி
- ↑ Lovelina Borgohain assured of Olympic boxing medal after reaching semifinals sportstar.thehindu.com. Retrieved 30 July 2021
- ↑ Well done, Lovlina! Vijender Singh, Anurag Thakur lead wishes as boxer assures India's second medal at Tokyo Times Now. Retrieved 30 July 2021
- ↑ Sarangi, Y. b (2021-08-04). "Tokyo Olympics". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-08-04.
வெளி இணைப்புகள்
தொகு- Lovlina Borgohain Profile Page:238