வங்காளதேசத்தில் குடும்பக் கட்டுப்பாடு
வங்காளதேசத்தில் குடும்பக் கட்டுப்பாடு (Family planning in Bangladesh) என்பது அரசு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அரசு சாரா நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகிறது.[1] [2] [3] தலைமை குடும்பக் கட்டுப்பாடு இயக்குநரகம் வங்காளதேசத்தில் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு பொறுப்பான அரசு நிறுவனம் ஆகும்.[4] மேரி ஸ்டாப்ஸ் வங்காளதேசம் என்பது ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பாகும். இது வங்காளதேசத்தில் குடும்பக் கட்டுப்பாடு சேவைகளை வழங்குகிறது. [5]
புள்ளி விவரம்
தொகு1975ஆம் ஆண்டில் வங்காளதேசத்தின் மக்கள் தொகை 76.3 மில்லியனாக இருந்தது. 2001 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 130.5 மில்லியனை எட்டியது.[6] வங்காளதேசம் 2.3 என்ற கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளது. இது ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின்படி, "குறைந்த வளம் கொண்ட நாடு" ஆகும்.[7] வங்காளதேசத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 1000 பேர் என்ற அளவில் அதிக மக்கள் அடர்த்தி உள்ளது.[8] சுதந்திரம் பெற்றதிலிருந்து வங்காளதேசம் அதன் மொத்த கருவுறுதல் வீதத்தை (TFR) 2.1 ஆக குறைத்துள்ளது. அதாவது பெண்களுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் உள்ளனர். இந்த மொத்த கருவுறுதல் விகிதமும் , இடம்பெயர்வும் இல்லாமல் ஒரு நாட்டின் மக்கள் தொகை பெருகுவதோ அல்லது சுருங்குவதோ இல்லை.[9] வங்காளதேசத்தின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் சமீபத்திய ஆண்டுகளில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக விவரிக்கப்பட்டுள்ளன.[10]
குடும்பக் கட்டுப்பாடு திட்டம்
தொகு1950இல் குடும்பத் திட்டமிடலானது மருத்துவத் தொண்டர்களாலும், சமூகப் பணியாளர்களாலும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1965இல் பாக்கித்தான் அரசாங்கம் கிழக்கு பாக்கித்தானில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தொடங்கியது. 1976ஆம் ஆண்டில் வங்காளதேச அரசு விரைவான மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை நாட்டின் முதல் பிரச்சனையாக அறிவித்தது.[11] வங்காளதேசம் சுதந்திரம் அடைந்ததிலிருந்து மக்கள் தொகை வளர்ச்சியை வேகமாக சந்தித்து வருகிறது. இது அதிக கருவுறுதல் விகிதம், அதிகரித்த ஆயுட்காலம், இறப்பு விகிதம் குறைதல் ஆகியவற்றின் விளைவாகும். 1975ஆம் ஆண்டில் மொத்த கருவுறுதல் விகிதம் 6.3 ஆக இருந்தது. வங்காளதேசத்தின் மக்கள்தொகை சுகாதார ஆய்வு 2011 சேகரித்த தரவுகளின்படி இது 2011க்குள் 2.3 ஆக குறைக்கப்பட்டது. பெரும்பாலான பெண்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பதை கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. வங்காளதேசத்தில் பெரும்பான்மையான பெண்கள் இரண்டு அல்லது அதற்கும் குறைவான குழந்தைகளைப் பெற விரும்புகிறார்கள் என்பதையும் அது கண்டறிந்தது. [12] 2011 முதல் மொத்த கருவுறுதல் விகிதம் 2.3 ஆக உள்ளது . குடும்பக் கட்டுப்பாடு குறித்த சர்வதேச மாநாட்டின் படி, வங்காளதேசத்தில் குடும்பக் கட்டுப்பாடு முன்னேற்றம் அடையவில்லை. [13] 2000ஆம் ஆண்டில் 160,300 ஆக இருந்த குழந்தை இறப்பு 2015ஆம் ஆண்டுக்குள் 83,100 ஆக குறைந்துள்ளதாக வாராந்திர பொது மருத்துவ இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது. உலகளவில் செத்து பிறாக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வங்காளதேசம் 7வது இடத்தில் உள்ளது.[14] வங்காளதேச மக்கள்தொகை சுகாதார ஆய்வு 2014 15 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 33% பேர் கர்ப்பமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மக்கள்தொகையில் அறுபத்தாறு சதவிகிதம் 19 வயதிற்கு முன்பே பெற்றெடுக்கிறது.[15] குடும்ப சேவை வங்காளதேசத்தின் குடும்ப சேவையை ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தல் ஆதரிக்கப்படுகிறது.[16]
பெண்களின் நிலைமை
தொகுவங்காளதேசத்தில் அதிகாரப்பூர்வ அரசாங்க மதிப்பீடுகளின்படி, 65% பெண்கள் தங்கள் 18வது பிறந்தநாளுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்.[17] 60% குழந்தை மணப்பெண்களுக்கு 19 வயதிற்குள் குழந்தைகளை பெறுகின்றனர். அவர்களில் 10 சதவீதம் பேர் 15 வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றிருக்கிறார்கள்.[18] வங்காளதேசத்தின் தண்டனைச் சட்டம் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணத்திற்கு முன் பாலுறவு வைத்துக்கொள்வது வெறுக்கத்தக்கதாக ஒப்புக்கொள்கிறது.[19]
கருத்தடை மருந்துகள்
தொகுவங்காளதேச அரசாங்க தரவுகளின்படி, நாட்டில் 40 சதவிகித தம்பதிகள் கருத்தடைகளைப் பயன்படுத்துவதில்லை.[20] கருத்தடை மருந்துகளின் மிகவும் பிரபலமான தேர்வு பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரையாகும் . சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வங்கதேசத்தில் கருத்தடைகளுக்கு மானியம் வழங்குகிறது. [21] இனப்பெருக்க ஆரோக்கியம் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதிவில்லை. மேலும், தேசிய கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இல்லை. [22] வங்காளதேசம் குடும்பக் கட்டுப்பாடு ஆலோசனை மற்றும் கருத்தடைகளை வழங்க பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. [23] வங்காளதேசத்தில் அதிக அளவு சட்டவிரோத கருக்கலைப்புகள் உள்ளன . மேலும், கருத்தடை மருந்துகள் அதிகரித்திருப்பது அதை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [24] அத்தியாவசிய மருந்துகள் நிறுவனம் 2010 முதல் வங்காளதேசத்தில் கருத்தடை உறைகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது. [25]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Niger minister keen to follow Bangladesh's initiatives". The Daily Star. 2016-05-18. http://www.thedailystar.net/city/niger-minister-keen-follow-bangladeshs-initiatives-1225738.
- ↑ "Family planning must to make population asset". The Daily Star. 2015-05-29. http://www.thedailystar.net/city/family-planning-must-make-population-asset-89272.
- ↑ "Population growth in Bangladesh". The Daily Star. 2010-11-22. http://www.thedailystar.net/news-detail-163080.
- ↑ "Progress stagnant for last 4 years". The Daily Star. 2016-01-27. http://www.thedailystar.net/backpage/progress-stagnant-last-4-years-207955.
- ↑ "DHL Bangladesh organises breast and cervical cancer awareness programme | Dhaka Tribune". Dhaka Tribune. 2017-03-11. http://www.dhakatribune.com/feature/health-wellness/2017/03/11/dhl-bangladesh-organises-breast-cervical-cancer-awareness-programme/.
- ↑ "Population control: Prospects still bleak". The Daily Star. 2010-12-11. http://www.thedailystar.net/news-detail-165546.
- ↑ "Bangladesh now a low fertility country". The Daily Star. 2013-06-19. http://www.thedailystar.net/news/bangladesh-now-a-low-fertility-country.
- ↑ "Population Challenges for Bangladesh". The Daily Star. http://archive.thedailystar.net/forum/2012/July/population.htm.
- ↑ "Healthy Change". D+C, development and cooperation. 2018-06-16. https://www.dandc.eu/en/article/how-bangladesh-reduced-average-number-children-woman-mere-21.
- ↑ "Bangladesh's family planning services have become 'weak': Analyst". bdnews24.com. http://bdnews24.com/health/2016/03/23/bangladeshs-family-planning-services-have-become-weak-analyst.
- ↑ "Controlling the population boom" (in en). The Daily Star. 2013-01-07. http://www.thedailystar.net/news-detail-264090.
- ↑ "Every Pregnancy is Wanted" (in en). The Daily Star. 2015-08-09. http://www.thedailystar.net/supplements/unfpa-supplement/every-pregnancy-wanted-124069.
- ↑ "Family planning stuck" (in en). The Daily Star. 2016-01-28. http://www.thedailystar.net/editorial/family-planning-stuck-208324.
- ↑ "Rate halved in 15 years" (in en). The Daily Star. 2016-01-22. http://www.thedailystar.net/frontpage/rate-halved-15-years-205471.
- ↑ "Zero Tolerance to Child Pregnancy" (in en). The Daily Star. 2016-10-11. http://www.thedailystar.net/round-tables/zero-tolerance-child-pregnancy-1297471.
- ↑ "Maternal Mortality affects development of a country" (in en). The Daily Star. 2014-10-02. http://www.thedailystar.net/maternal-mortality-affects-development-of-a-country-44215.
- ↑ "Bali conference calls for higher investments in family planning". Dhaka Tribune இம் மூலத்தில் இருந்து 2017-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170415200448/http://archive.dhakatribune.com/bangladesh/2016/jan/26/bali-conference-calls-higher-investments-family-planning.
- ↑ "Rakibul Hasan wins 120 Under 40 award". Dhaka Tribune. http://www.dhakatribune.com/feature/2016/11/10/rakibul-hasan-wins-120-40-award/.
- ↑ "Does Bangladesh have an age of consent?". Dhaka Tribune. http://www.dhakatribune.com/opinion/op-ed/2017/03/11/bangladesh-age-consent/.
- ↑ "Bali conference calls for higher investments in family planning". Dhaka Tribune இம் மூலத்தில் இருந்து 2017-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170415200448/http://archive.dhakatribune.com/bangladesh/2016/jan/26/bali-conference-calls-higher-investments-family-planning."Bali conference calls for higher investments in family planning". Dhaka Tribune. Archived from the original on 2017-04-15. Retrieved 2017-04-14.
- ↑ "Modern contraceptive options in Bangladesh". The Daily Star. http://www.thedailystar.net/health/modern-contraceptive-options-bangladesh-1367185.
- ↑ "Contraceptive use among married adolescent girls". The Daily Star. http://www.thedailystar.net/news/contraceptive-use-among-married-adolescent-girls.
- ↑ "How Bangladesh's female health workers boosted family planning". The Guardian. https://www.theguardian.com/global-development/2014/jun/06/bangladesh-female-health-workers-family-planning.
- ↑ "Family planning in Bangladesh | Science and Technology". BBC World Service. http://www.bbc.co.uk/worldservice/sci_tech/highlights/011001_bangladesh.shtml.
- ↑ "Made in Bangladesh: contraceptives". The Daily Star. http://www.thedailystar.net/news-detail-196641.