வங்காளதேசத் திரைப்படத்துறை

வங்காளதேசத் திரைப்படத்துறை அல்லது தலிவுட் (Cinema of Bangladesh) என்பது வங்காளதேச நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். இந்த துறை 1970ஆம் ஆண்டு முதல் டாக்கா என்ற நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவருகிறது.

வங்காளதேசத் திரைப்படத்துறை
திரைகளின் எண்ணிக்கை200 (2019)[1]
 • தனிநபருக்கு100,000 க்கு 0.2 (2016)
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2017)
மொத்தம்63

வங்காளதேசத் திரைப்படத்துறையில் உணர்சியூட்டும் வகையான திரைப்படங்கள் 1947 முதல் 1990 வரை ஆதிக்கம் செலுத் திவந்தது. அதன் விலையாக பல திரைப்படங்கள் இந்த பாணியிலே தயாரிக்கப்பட்டது. வங்காளதேசத்தில் பிராட்போர்டு பயோஸ்கோப் நிறுவனத்தால் 1898 ஆம் ஆண்டு திரைத்துறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நாடு முதல் திரைப்பட வெளியீட்டை ஏற்பாடு செய்த பெருமை பெற்றது. 1913 மற்றும் 1914 க்கு இடையில் முதல் தயாரிப்பு நிறுவனமான பிக்சர் ஹவுஸ் துவங்கப்பட்டது. 1928 ஆம் ஆண்டில் முதல் வங்காள மொழியில் 'சுகுமரி' (தி குட் கேர்ள்) என்ற தலைப்பில் குறும் ஊமைத் திரைப்படம் தயாரிக்கட்டது. 1931 இல் முதல் முழு நீள திரைப்படமான 'தி லாஸ்ட் கிஸ்' என்ற திரைப்படம் வெளியிடப்பட்டது.

பாக்கித்தானிலிருந்து வங்காளதேசம் பிரித்ததைத் தொடர்ந்து, டாக்கா நகரம் வங்காளதேசத் திரையுலகின் மையமாக மாறியது, மேலும் தலிவுட் படங்களுக்கான வருவாய், உற்பத்தி மற்றும் பார்வையாளர்களின் பெரும்பகுதியாக இன் நகரம் வளர்ச்சி பெற்றது. 1956 இல் வங்காளதேசத்தின் முதல் வங்காள மொழி முழு நீள திரைப்படமான 'தி பேஸ் அண்ட் தி மாஸ்க்' என்ற திரைப்ப டம் தயாரிக்கப்பட்டது.[2][3]

1970 களில் பல தலிவுட் படங்கள் இந்திய படங்களால் ஈர்க்கப்பட்டன, சில படங்கள் அந்த படங்களின் அதிகாரப்பூர்வமற்ற ஆக்கமகா இருந்தன. தொழில் தொடர்ந்து வளர்ந்து வந்தது, பல வெற்றிகரமான வங்காளதேசத் திரைப்படங்கள் 1970 கள், 1980 கள் மற்றும் 1990 களின் முதல் பாதி முழுவதும் தயாரிக்கப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. Laghate, Gaurav (15 August 2016). "United Mediaworks expands footprint to Bangladesh". Economic Times. http://economictimes.indiatimes.com/industry/media/entertainment/media/united-mediaworks-expands-footprint-to-bangladesh/articleshow/53703262.cms. 
  2. "History of Bangladeshi Film". cholochitro.com. Cholochitro. பார்க்கப்பட்ட நாள் 1 December 2014.
  3. "Mukh O Mukhosh". bfa.gov.bd. Archived from the original on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2014.

வெளிப்புற இணைப்புகள்

தொகு