வங்காளதேச துடுப்பாட்ட வாரியம்

வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் (Bangladesh Cricket Board, BCB), முன்னதாக வங்காளதேச துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம், வங்காளதேசத்தில் துடுப்பாட்டத்தை நிர்வகிக்கின்ற முதன்மை அமைப்பாகும். தாக்காவில் தலைமையகத்தைக் கொண்டு வங்காளதேசத்தில் நடைபெறும் அனைத்து வகை துடுப்பாட்ட போட்டிகளையும் துடுப்பாட்ட அரங்குகளையும் கண்காணிப்பதுடன் வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் தேர்வையும் மேலாண்மை செய்கிறது.

வங்காளதேச துடுப்பாட்ட வாரியம்
Bangladesh Cricket Board
உருவாக்கம்1972
தலைமையகம்தாக்கா, வங்காளதேசம்
பிசிபி தலைவர்
வங்காளதேசம் முஸ்தபா கமால்
வலைத்தளம்டைகர்கிரிக்கெட்.கொம்

அரங்கங்கள்தொகு

ஒ.ப.து. & தேர்வு அரங்கங்கள்

  1. சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்பூர், தாக்கா
  2. நாராயண்கஞ்ச் ஓஸ்மானி அரங்கம், ்பாதுல்லா, நாராயண்கஞ்ச்
  3. சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்
  4. சகீத் சந்து விளையாட்டரங்கம், போக்ரா

ஒருநாள் துடுப்பாட்ட அரங்கங்கள்

  1. குல்னா கோட்ட விளையாட்டரங்கம், குல்னா

முந்தைய அரங்கங்கள்

  1. பங்கபந்து தேசிய விளையாட்டரங்கம், மோதிஜீல், தாக்கா
  2. எம்ஏ அசீஸ் விளையாட்டரங்கம், சிட்டகொங்

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகள், 2013தொகு

2013ஆம் ஆண்டு ப.து.அ இருபது20 வாகையாளர் போட்டிகளை வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் ஏற்று நடத்த தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.

வெளியிணைப்புகள்தொகு