நாராயண்கஞ்ச்

இக்கட்டுரை நாராயண்கஞ்ச் நகரைக் குறித்தது. நாராயண்கஞ்ச் மாவட்டம் வேறானது.

நாராயண்கஞ்ச் (வங்காளம்: নারায়ণগঞ্জ Naraeongônj) வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவை அடுத்துள்ள நகரமாகும். நாயண்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இதன் மக்கள்தொகை 220,000 ஆகும். சீதாலக்யா ஆற்றின் கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது. நாராயண்கஞ்ச் ஆற்றுத்துறைமுகம் வங்காளதேசத்தின் மிகப் பழமையான துறைமுகங்களில் ஒன்றாகும். [1] சணல், துணி தொழில்களுக்கு வணிக மையமாக விளங்குகிறது.இங்குள்ள ஏராளமான சணல் ஆலைகளை ஒட்டி இது வங்காளதேசத்தின் டுண்டி எனப்படுகிறது. (டுண்டி சணல் தொழிலுக்கு புகழ்பெற்ற இசுக்கொட்லாந்திலுள்ள நகரமாகும்.)

நாராயண்கஞ்ச், வங்காளதேசம்
নারায়ণগঞ্জ
நகரம்
நாடு வங்காளதேசம்
கோட்டம்தாக்கா கோட்டம்
மாவட்டம்நாராயண்கஞ்ச் மாவட்டம்
அரசு
 • வகைநாராயண்கஞ்ச் மாநகராட்சி
 • மேயர்டா. சாலினா அயாத் ஐவி
பரப்பளவு
 • நகரம்759.57 km2 (293.27 sq mi)
 • நீர்48.56 km2 (18.75 sq mi)
ஏற்றம்3 m (10 ft)
மக்கள்தொகை (2012)
 • நகரம்15,72,386
 • அடர்த்தி2,100/km2 (5,400/sq mi)
 • பெருநகர்2.2 மில்லியன்
நேர வலயம்வங்காளதேச நேரம் (ஒசநே+6)
அஞ்சல் குறியீடு1400
தொலைபேசி குறியீடு0671
அழைப்புக் குறியீடு02
இணையதளம்நாராயண்கஞ்ச்

மேற்சான்றுகள்தொகு

  1. "Narayanganj". banglapedia. 2007-07-06 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்கஞ்ச்&oldid=3218341" இருந்து மீள்விக்கப்பட்டது