வசந்த உற்சவம்

வசந்த உற்சவம் (Vasanthotsavam) என்பது திருமலையில் வசந்த காலத்தின் வருகையைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகும். வசந்தோற்சவம் என்றும் இந்நிகழ்வு அறியப்படுகிறது.

வசந்தோற்சவம் என்பது இரண்டு வார்த்தைகளின் தொகுப்பாகும். "வசந்த" (சமசுகிருதத்தில் வசந்த காலம்) மற்றும் "உற்சவம்" (சமசுகிருதத்தில் பண்டிகை). சித்திரை மாதத்தின் திரயோதசி, சதுர்த்தசி மற்றும் பௌர்ணமி ஆகிய மூன்று நாட்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.[1] கிரெகொரியன் நாட்காட்டியின் படி இத்திருவிழா மார்ச்சு மாத இறுதியிலிருந்து ஏப்ரல் நடுப்பகுதிக்குள் நடைபெறுகிறது.

வரலாறு & தொடக்கம்

தொகு

திருமலையில் இத்திருவிழா கொண்டாட்டமானது அச்சுதரானாரின் காலத்தில் (சாகா 1460) பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிலில் கணக்காயர் மகன் பெரிய சோலை வழங்கிய 3000 நற்பணி நிதியில் விழா துவங்கியது.[2]

விழா

தொகு

இந்து நாட்காட்டி மாதமான பால்குணத்தில் உத்தரபாத்ரா நட்சத்திர நாளில் நடத்தப்படும் அங்குரார்ப்பணம் (ஒன்பது வகையான விதைகளை விதைத்தல்) விழாவுடன் திருவிழா தொடங்குகிறது.[2] வசந்தோத்சவம் விழா தொடங்குவதற்கு ஒரு நாள் முன், புண்ணிய வசனம் (சுத்திகரிப்பு சடங்குகள்), வாஸ்து சாஸ்தி (தெய்வம் மற்றும் இயற்கையின் இறைவன் மற்றும் அவற்றின் கூறுகள் மற்றும் இயற்கை சக்திகள் மற்றும் திசைகள் மற்றும் சுற்றுச்சூழலின் இறைவன் மற்றும் தெய்வம்) மற்றும் சம்ப்ரோக்ஷணம் சடங்குகள் செய்யப்படுகின்றன. இதனைக் கோவில் பூசாரிகள் (புனித பிரதிஷ்டை) மேற்கொள்கின்றனர்.[3] இந்த சடங்குகளில் கலந்துகொள்ளப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

அபிஷேகம் - குறிப்பாக ஸ்னபன திருமஞ்சனம் (புனித ஸ்நானம்) என்று அழைக்கப்படும், உற்சவ மூர்த்தி மற்றும் அவரது துணைவியார்களுக்குக் கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ள வசந்தோற்சவ மண்டபத்தில் மூன்று நாட்களும் செய்யப்படுகிறது. மூன்றாம் நாள், இராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோருடன் கிருஷ்ணர் மற்றும் ருக்மிணி ஆகியோர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். இரவு இத்தெய்வங்களின் வீதி உலா மாடவீதிகளில் நடைபெறும்.

2006ஆம் ஆண்டு கோயில் சுற்றுப்புறச் சீரமைப்புப் பணியின் ஒரு பகுதியாக வசந்தோற்சவ மண்டபம் இடிக்கப்பட்டது. இதன் பின்னர் பிரதான கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள வைபவத்சவ மண்டபம் இத்திருவிழாவிற்குப் பயன்படுத்தப்படுகிறது.[3]

பக்தர்கள் பங்கேற்பு

தொகு

வசோந்தோத்சவம் என்பது ஆர்ஜித சேவை - கட்டண சேவையாகும். பக்தர்கள் விழாவைக் காணப் பணம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு அனுமதிச் சீட்டின் விலை 300 ($7) ஆகும். அபிஷேக மண்டபத்திற்குள் ஒருவர் நுழைவதைத் தவிர, சீட்டு வைத்திருப்பவர் ஆண் எனில், பட்டு அங்கவஸ்திரம் ஒன்றும், பெண் எனில் இரவிக்கை துண்டு ஒன்றும், 2 தோசை, 1 வடை மற்றும் கோவில் அன்னப்பிரசாதம் (அரிசியினால் சமைக்கப்பட்ட உணவு) வழங்கப்படுகிறது.[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "TTD Annual Sevas - Vasanthotsavam". TTD official website. Archived from the original on 2007-05-16. பார்க்கப்பட்ட நாள் 2008-04-18.
  2. 2.0 2.1 N, Ramesan (1981). The Tirumala Temple. Tirupati: TTD.
  3. 3.0 3.1 "Vasanthotsavam begins". தி இந்து. 2006-04-12. Archived from the original on 2006-04-19. பார்க்கப்பட்ட நாள் 2008-04-18.
  4. "Annual Sevas". Tirumala official website. Archived from the original on 2007-05-14. பார்க்கப்பட்ட நாள் 2008-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த_உற்சவம்&oldid=4096012" இலிருந்து மீள்விக்கப்பட்டது