வசந்த சேனா (1967 திரைப்படம்)
வசந்த சேனா ( Vasantha Sena ) என்பது 1967ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த திரைப்படமாகும். இது விக்ரம் ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் பி.எஸ்.ரங்கா என்பவர் தயாரித்து இயக்கியிருந்தார்.[2] இதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், கிருஷ்ண குமாரி [3] ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க எஸ்.ராஜேஸ்வர ராவ் இசையமைத்திருந்தார். இப்படம் கிபி 3 – 4ஆம் நூற்றாண்டில் சமசுகிருத மொழி நாடக ஆசிரியரும் உஜ்ஜைன் நாட்டு மன்னருமான சூத்திரகர் என்பவரால் சமசுகிருத மொழியில் இயற்றப்பட்ட [4][5] மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.[6]
வசந்த சேனா | |
---|---|
இயக்கம் | பி. எஸ். இரங்கா |
தயாரிப்பு | பி. எஸ். இரங்கா |
கதை | வேம்படீ சதாசிவபிரம்மம் (வசனம்) |
இசை | எஸ். ராஜேஸ்வர ராவ் |
நடிப்பு | அக்கினேனி நாகேஸ்வர ராவ் கிருஷ்ண குமாரி |
ஒளிப்பதிவு | பி. எஸ். இரங்கா பி. எஸ். ஹயாஸ் |
படத்தொகுப்பு | பி. ஜே. மோகன் எம். தேவேந்திரநாத் டி. சக்ரபாணி |
கலையகம் | விக்ரம் புரடக்ஷன்ஸ்[1] |
விநியோகம் | நவயுக பிலிம்ஸ் |
வெளியீடு | ஆகத்து 12, 1967 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
நடிகர்கள்
தொகு- சாருதத்தனாக அக்கினேனி நாகேஸ்வர ராவ்
- வசந்த சேனையாக கிருஷ்ண குமாரி
- சம்ஸ்தானகனாக எஸ். வி. ரங்கராவ்
- சார்விளாகனாக இரேலங்கி
- ஆர்யகனாக கைகலா சத்ய நாராயணா
- மைத்திரேயராக வள்ளூரி பாலகிருஷ்ணா
- அதிதியாக அஞ்சலிதேவி
- மதனிகாவாக கிரிஜா
- அனக சேனாவாக பத்மினி
- சவிதா
திரைப்படக் குழு
தொகு- கலை : வாலி, சுதிது ராய்
- நடனவடிவமைப்பு: ஹீராலால், சின்னி-சம்பத், ஏ.கே. சோப்ரா
- உரையாடல்கள் : வேம்படீ சதாசிவபிரம்மம்
- பாடல் : சி. நாராயண ரெட்டி, தசரதி, சிறீ சிறீ, கோசராஜு
- பின்னணி : கண்டசாலா, பி. சுசீலா, எஸ். ஜானகி, பி. பி. ஸ்ரீனிவாஸ், மாதவபெட்டி சத்யம், பி. லீலா, பி. வசந்தா, சொர்ணலதா
- இசை : எஸ். ராஜேஸ்வர ராவ்
- படத்தொகுப்பு : பி.ஜே.மோகன், எம்.தேவேந்திரநாத், டி.சக்ரபாணி
- ஒளிப்பதிவு : பி.எஸ்.ரங்கா, பி.எஸ்.ஹயாஸ்
- தயாரிப்பாளர் - இயக்குநர் : பி.எஸ்.ரங்கா
- நிறுவனம் : விக்ரம் புரொடக்ஷன்ஸ்
- வெளியீட்டு தேதி : 12 ஆகஸ்ட் 1967
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vasantha Sena (Overview)". IMDb.
- ↑ "Vasantha Sena (Direction)". Know Your Films.
- ↑ "Vasantha Sena (Cast & Crew)". gomolo.com. Archived from the original on 2018-08-29. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.
- ↑ Richmond, Farley P. (1990). Farley P. Richmond; Darius L. Swann; Phillip B. Zarrilli (eds.). id=OroCOEqkVg4C&printsec=frontcover&dq=Indian+Theatre:+Traditions+of+Performance&source=bl&ots=HgqRvBwp2l&sig=UsfsLg6Lh5etl3lnT_VRp1Z25vU&hl=en&sa=X&ei=Uqb_T_-8D8mvqQGei_2ZBw&ved=0CDkQ6AEwAA#v=onepage&q&f=false "Characteristics of Sanskrit Theatre and Drama." in Indian Theatre: Traditions of Performance. Honolulu: University of Hawaii Press. pp. 55–62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0824811909.
{{cite book}}
: Check|url=
value (help); Missing pipe in:|url=
(help) - ↑ Oliver, Revilo Pendelton (1938). Rozelle Parker Johnson; Ernst Krenn (eds.). "Introduction to 'The Little Clay Cart.' " in Illinois Studies in Language and Literature 23. Urbana: University of Illinois Press. pp. 9–44.</re> <ref மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு
- ↑ "Vasantha Sena (Review)". Spicy Onion.