வசிசிதி ஆறு

வசிசிதி ஆறு (Vashishti River) இந்தியாவின் மகாராட்டிராவின் கொங்கண் கடற்கரையில் உள்ள பெரிய ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றது. அலோர் அருகே பரந்த நீர்த்தேக்கமாக கொகேவாதி அணை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து துணை ஆறு ஒன்றும் செல்கிறது.

சிப்லூனில் உள்ள வசிசிதி ஆறு
வசிசிதி ஆறு தபோல் அருகே அரபிக்கடலில் கலக்கிறது

வரலாறு மற்றும் குடியேற்றங்கள்

தொகு

சிப்லுன் நகரம் இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2005 மகாராட்டிர வெள்ளத்தின் போது, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நகரவாசிகள் பலர் இந்நகரைவிட்டு வெளியேற்றினர்.

காட்டுயிர்

தொகு

 

 
வசிசிதி ஆற்றில் முதலை
 
சிப்லூனுக்கு அருகிலுள்ள கொங்கண் இருப்பாதையிலிருந்து வசிசிதி ஆற்றின் காட்சி

இந்த ஆற்றில் பல தீவுகள் உள்ளன. சதுப்புநில முதலை[1][2] இந்த ஆற்றின் நீர்நிலைகளில் வசிப்பதாக அறியப்படுகிறது. [3]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Da Silva, A. and Lenin, J. (2010). "Mugger Crocodile Crocodylus palustris, pp. 94–98 in S.C. Manolis and C. Stevenson (eds.) Crocodiles. Status Survey and Conservation Action Plan. 3rd edition, Crocodile Specialist Group: Darwin.
  2. Hiremath, K.G. Recent advances in environmental science. Discovery Publishing House, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7141-679-9.
  3. Mahar page at wii.gov.in
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசிசிதி_ஆறு&oldid=3789685" இலிருந்து மீள்விக்கப்பட்டது