வடக்கன் கோயிக்கால் தேவி கோயில், புதியவிளை
வடக்கன் கோயிக்கால் தேவி கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் காயங்குளத்திற்கு அருகில் உள்ள புதியவிளை கிராமத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற தேவி கோவில் அல்லது பகவதி கோயில் ஆகும்.
துணைத்தெய்வங்கள்
தொகுஇக்கோயிலின் மூலவர் பார்வதி தேவி ஆவார். [1]இங்கு சிவன், பத்ரகாளி, தர்ம சாஸ்தா ஆகிய துணைத்தெய்வங்கள் உள்ளன. நாக தேவதை, கந்தகர்ணன், யக்சி, யோகீஸ்வரன், பிரம்ம ரக்சர் ஆகியோரின் சிலைகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
கருவறை சிறப்பு
தொகுஇரண்டு தளங்களைக் கொண்ட மூலவர் கருவறை இக்கோயிலின் முக்கியமான சிறப்பாகும். பார்வதி சிலை தரை தளத்திலும், மகாதேவன் (சிவன்) சிலை முதல் தளத்திலும் உள்ளன.
விழாக்கள்
தொகுமலையாள நாட்காட்டி மாதமான குபத்தின் பரணி நாளில் கும்ப பரணி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் வடக்கன் கோயிக்கால் தேவியின் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இவ்விழா 10 நாள்கள் நடைபெறும். நவஹ யக்ஞம் இக்கோயிலில் ஏப்ரல் - மே மாதங்களில் ஒன்பது நாட்கள் நடத்தப்படும் கொண்டாட்டங்களில் ஒன்றாகும். இந்த ஒன்பது நாட்களிலும் கோயிலில் மிகச் சிறந்த சமய சடங்குகளும் (பூஜைகள்), அன்னதானமும் நடத்தப்படும்.