வடக்கு எல்லைகள் மாகாணம்
சவூதி அரேபியாவின் பிராந்தியம்
வடக்கு எல்லைகள் பிராந்தியம் (Northern Borders Province, அரபு மொழி: منطقة الحدود الشمالية Al-Ḥudūd Aš-Šamāliyya ) என்பது சவூதி அரேபியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட பிராந்தியம் ஆகும். இது ஈராக் மற்றும் ஜோர்டானின் எல்லையில் நாட்டின் வடக்கே அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 111,797 கிமீ² ஆகும். மேலும் 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 320,524 ஆகும். [1] இப்பிராந்தியம் மூன்று கவர்கரேட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை 'அர், ரஃபா, துரைஃப் மற்றும் தலைநகராற 'அர்'ஆர் ஆகும்.
வடக்கு எல்லைகள் மாகாணம்
الحدود الشمالية Al-Ḥudūd Al-Shimāliyyah | |
---|---|
பிராந்தியம் | |
சவுதி அரேபியாவில் வடக்கு எல்லைகள் மாகாணத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: | |
Country | சவூதி அரேபியா |
தலைநகரம் | ஆர் ஆர் |
மாநகராட்சிகள் | 3 |
அரசு | |
• ஆளுநர் | பைசல் பின் காலித் பின் சுல்தான் பின் அப்துல்ஸீஸ் அல் சவுத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,11,797 km2 (43,165 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 3,75,310 |
• அடர்த்தி | 3.4/km2 (8.7/sq mi) |
ISO 3166-2 | 08 |
மக்கள் தொகை
தொகுஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
---|---|---|
1992 | 2,29,060 | — |
2004 | 2,79,971 | +1.69% |
2010 | 3,21,880 | +2.35% |
2018 | 3,75,310 | +1.94% |
source:[2] |
நிர்வாக பிரிவுகள்
தொகுஇப்பகுதி நான்கு ஆளுநரகங்களாக (கவர்னரேட்) பிரிக்கப்பட்டுள்ளது: [1]
- அரார் (நிர்வாக மையம் அரார் )
- ரஃபா ( ரஃபா )
- துரைஃப் ( துரைஃப் )
- அல் உவேகிலா ( அல் உவேகிலா )
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "The Sixteenth Services Guide 2017:Northern Borders Region" (PDF). Central Authority for Statistics.
- ↑ Saudi Arabia: Regions and Cities