வடமத்திய மாகாண சபையின் கொடி
வடமத்திய மாகாண சபையின் கொடி என்பது, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளுள் ஒன்றான வடமத்திய மாகாண சபைக்கான கொடி ஆகும். இது 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பயன்பாட்டு முறை | Civil and state கொடி |
---|---|
அளவு | 2:3 |
ஏற்கப்பட்டது | 1987 |
வடிவம் | இரண்டு நிலைக்குத்து பச்சை, சிவப்புப் பட்டைகள், அரக்கு நிறச் சதுரப் பின்னணியில் மஞ்சள் வட்டத்துள் நினைவுச் சின்னங்கள், மஞ்சள் கரை. |
அமைப்பு
தொகுவடமத்திய மாகாண சபையின் கொடி ஏறத்தாழ இலங்கையின் தேசியக் கொடியின் அமைப்பை ஒத்தது. அரக்கு நிறப் பின்னணி அதன் நான்கு மூலைகளிலும் அரசிலை, கொடியின் இடப்புறத்தில் பச்சை, சிவப்பு நிறங்களில் இரண்டு நிலைக்குத்துப் பட்டைகள், முழுக் கொடியையும் சுற்றி மஞ்சள் நிறக் கரை என்பன தேசியக் கொடியை ஒத்தவை. ஆனால் தேசியக் கொடியில் இருப்பதுபோல் சிங்கம் இதில் இல்லை. அதற்குப் பதிலாக வெண்ணிறக் கரையுடன் கூடிய மஞ்சள் நிற வட்டத்துள் வடமத்திய மாகாணத்துக்குச் சிறப்பான பழங்கால நினைவுச் சின்னங்கள் உள்ளன. இவற்றுள் முதலாம் பராக்கிரமபாகுவின் சிலை, தாதுகோபம், பழைய கட்டிடமொன்றின் சரிந்த தூண் என்பவை அடங்குகின்றன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ வடமத்திய மாகாணத்தின் கொடி பரணிடப்பட்டது 2015-08-16 at the வந்தவழி இயந்திரம், வடமத்திய மாகாண சபையின் இணையத்தளம்.