வடமேற்குக் கோலமி மொழி
(வடமேற்குக் கோலமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வடமேற்குக் கோலமி மொழி கோலமி-நாய்க்கி பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேச, மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 50,000 மக்களால் பேசப்படுகிறது. கோலம்போலி, குலமே, கோலம், கோல்மி போன்ற பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுகின்றது. இதற்குப் பல்வேறு கிளை மொழிகளும் உள்ளன. தென்கிழக்குக் கோலமி என அழைக்கப்படும் மொழிக்கும் இதற்கும் இடையில் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை மிகக் குறைவு. இதனால் இரண்டும் வெவ்வேறு மொழிகளாகக் கணிக்கப்படுகிறன.
வடமேற்குக் கோலமி | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 50,000 (1989) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | gau |