வத்சல் சேத்

இந்திய நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்
(வட்சால் சேத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வத்சல் சேத் (குசராத்தி: વત્સલ શેઠ, இந்தி: वत्सल शेठ) (பிறப்பு: 5 ஆகஸ்ட் 1980) ஒரு இந்திய நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஜஸ்ட் மொஹபட் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு டார்சன் : வொண்டர் கார் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். இவர் தற்பொழுது ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஏக் ஹசினா தி என்ற தொடரில் நடித்துக்கொண்டு இருக்கின்றார். இவர் 2008ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வத்சல் சேத்
பிறப்பு5 ஆகத்து 1980 ( 1980 -08-05) (அகவை 44)
மும்பை, இந்தியா
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

வத்சல் சேத் குசராத்தி பெற்றோருக்கு 1980 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 5 ஆம் தேதியன்று மும்பையில் பிறந்தார்.[1] குடும்பத்தில் இருந்த இரண்டு உடன்பிறப்புகளில் இவர் மூத்தவர் ஆவார். சைவ உணவுப் பிரியராகவும் [2] மதுவைப் பயன்படுத்தாதிருக்கும் கொள்கை கொண்டவராகவும் இவர் அறியப்படுகிறார்.[3]

திரைப்படங்கள்

தொகு
  • 2004: டார்சன் : வொண்டர் கார்
  • 2007: நன்ஹி ஜெய்சால்மர்
  • 2008: பொம்மலாட்டம்
  • 2008: ஹீரோஸ்
  • 2009: Paying Guests
  • 2010: Toh Baat Pakki
  • 2011: ஹோஸ்டேல்
  • 2012: Uncoupled
  • 2014: ஜெய் ஹோ

சின்னத்திரை

தொகு
  • 1996-200: ஜஸ்ட் மொஹபட்
  • 2014-  : ஏக் ஹசினா தி

உதவி இயக்குநர்

தொகு
  • 2008: The Cheetah Girls: One World

தயாரிப்பாளர்

தொகு
  • 2008: சொறி பாய் (Sorry Bhai)

மேற்கோள்கள்

தொகு
  1. Awaasthi, Kavita (16 August 2014). "I was scared to tell mom that I play a rapist in Ek Thi Hasina: Vatsal Seth". ஹிந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/tv/i-was-scared-to-tell-mom-that-i-play-a-rapist-in-ek-thi-hasina-vatsal-seth/story-ULuSSUS6CV5HEjgYHwmhHJ.html. 
  2. "I don't follow any diet to stay fit: Vatsal Sheth". Archived from the original on 18 செப்டெம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டெம்பர் 2017.
  3. "Vatsal Sheth is healthy, wealthy and wise – Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 16 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டெம்பர் 2017.

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வத்சல் சேத்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்சல்_சேத்&oldid=4165615" இலிருந்து மீள்விக்கப்பட்டது