வலகம்பாகு

(வட்டகாமினி அபயன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயன் [1] என்பவன் இலங்கையின் அனுராதபுர அரசனாவான். அரசனாகி ஐந்து மாதங்களுக்குப் பின், தென்னிந்தியாவில் இருந்து வந்த ஒரு கிளர்ச்சிப் படை மூலம் இவனை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் பதினான்கு ஆண்டுகள் கழித்து படையெடுப்பாளர்களை தோற்கடித்து மீண்டும் அரியணை ஏறினான்.

வலகம்பாகு
இலங்கை மன்னன்
ஆட்சிகி.மு. 103, கி.மு. 89 – கி.மு. 77
முன்னிருந்தவர்தாதிக
மகசுழி மகாதிஸ்ஸ
அரசிஅனுலா தேவி
சோமாதேவி
முழுப்பெயர்
வட்டகாமினி அபயன்
இறப்புகி.மு. 77

துட்ட காமினியின் சகோதரனான சத்தா திச்சனின் நான்காம் மகன் ஆவான். இவனுடைய மூத்த சகோதரர்களான துலத்தன், லஞ்ச திச்சன், கல்லாட நாகன் என்போர் இவனுக்கு முன்பே ஆட்சிபுரிந்தனர்.[2] இவன் கல்லாட நாகனின் மகனான மகசுழிகா என்பவனை தனது மகனாக ஏற்றுக்கொண்டான். மகசுழிகாவின் தாயான அனுலாதேவியை ராணியாக ஏற்றுக்கொண்டான். இவனுக்கு சோமாதேவி எனும் இன்னொரு மனைவியும் இருந்தாள்.

சேவைகள்

தொகு
 
வலகம்பாகுவால் கட்டப்பட்ட அபயகிரி விகாரை

இவனே அபயகிரி விகாரையைக் கட்டுவித்தான். இதன் உயரம் 70 மீற்றர்கள் ஆகும். [3] இவ்வபயகிரி விகாரை பின்னாளில் நாட்டின் பிரதான மூன்று பௌத்த அமைப்புக்களுள் ஒன்றாக விளங்கியது. இதைவிடவும் மேலும் சில தாதுகோபங்களையும் இவன் கட்டியுள்ளான். இதைப்பற்றிய குறிப்புக்கள் திரிபிடகத்தில் இவ்வரசனின் ஆட்சிக்காலத்தில் பதியப்பட்டுள்ளன. [4]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Obeyesekere, Gananath. The Cult of the Goddess Pattini. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-61602-9.
  2. Geiger, Wilhelm. "Mahavamsa - The Ten Kings". Archived from the original on 2010-04-22. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.
  3. "Anuradhapura". Sacred Destinations. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.
  4. Ellawala, H. (1969). Social Hostory of Early Ceylon. Department of Cultural Affairs.

வெளி இணைப்புக்கள்

தொகு
வலகம்பாகு
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் அனுராதபுர அரசன்
கி.மு. 103 மற்றும் கி.மு. 89–கி.மு. 77
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலகம்பாகு&oldid=3702833" இலிருந்து மீள்விக்கப்பட்டது