வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி
யா/ வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி (ஆங்கிலம்: Vaddukoddai Hindu College, வட்டு இந்துக் கல்லூரி மற்றும் VHC என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இலங்கையின் (சித்தங்கேணிக்கு அருகில்) வட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தேசியப் பாடசாலை ஆகும்.[1]
Vaddukoddai Hindu College வட்டு இந்துக் கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம் இலங்கை | |
அமைவிடம் | 9°44′50.50″N 79°57′27.20″E / 9.7473611°N 79.9575556°E |
தகவல் | |
வகை | 1AB தேசிய பாடசாலை |
நிறுவல் | 9 அக்டோபர் 1894 |
நிறுவனர் | அம்பலவாண நாவலர் |
பள்ளி மாவட்டம் | வலிகாமம் கல்வி வலயம் |
பள்ளி இலக்கம் | 1011001 |
தரங்கள் | 6 தொடக்கம் 13 வரை |
பால் | இருபாலார் |
வயது வீச்சு | 11 தொடக்கம் 19 வரை |
மாணவர்கள் | 1000 + |
மொழி | தமிழ், ஆங்கிலம் |
சுலோகம் | பிச்சை எடுத்தும் கற்பண கல் |
விளையாட்டுக்கள் | கிரிக்கெட் |
இணையம் | vhc.sch.lk |
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி 1894 (09.10.1894)[2] மாதம் விஜயதசமி அன்று அம்பலவாண நாவலரால் ஆங்கிலப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது.
அக்காலத்தில் அரசாங்க தொழில் புரிய ஆங்கிலம் தேவை என்பதால் ஆங்கில மொழியில் கல்வி கற்க வட்டுக்கோட்டை செமினரிக்கு செல்லவேண்டும். ஆனால் அங்கு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே கல்வி கற்பித்தனர்.[சான்று தேவை] இதனால் "சைவ தமிழ்" பிள்ளைகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். இதனை தடுக்கும் வகையிலும் மற்றும் ஏழை "சைவ தமிழ்" குழந்தைகள் கிறிஸ்தவ மதம் மாறாமல் ஆங்கில மொழி கல்வி கற்று அரசு வேலை பெற இக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[சான்று தேவை]
அதிபர்கள்
தொகு- 1894-1906 அம்பலவாண நாவலர்
- 1906- ஆசிரியர் சின்னத்துரை