வட்டு விளையாட்டு

வட்டு உருண்டையான விளையாட்டுக் கருவி. இக்காலத்தில் தடகள விளையாட்டுகளில் ஒன்றான வட்டு எறிதல் விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் தட்டையான பந்தை வட்டு எனக் குறிப்பிடுகிறோம். வட்டு என்னும் குண்டை வைத்துக்கொண்டு சங்ககாலத்தில் விளையாடப்பட்ட விளையாட்டுகள் இவை. விளையாட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டின் வகைகளை அந்தந்த விளையாட்டுகளில் காணவாம்.

*வட்டுதொகு

நெல்லிக்காய் [1], ஆமை முட்டை [2] ஈங்கைப் பூவின் மொட்டு [3], ஆகியவை உருண்ட வட்டு போல இருக்கும்.

வட்டுப்பந்துதொகு

வட்டுக்குண்டுதொகு

 • வட்டு – நெல்லிவட்டு – marble of emblic myrobalam சங்ககாலத்தில் வேட்டையாடி உண்ணும் எயினர்களின் கல்லாச் சிறுவர்கள் [4] நெல்லிக்காயைக் குண்டாக வைத்துக்கொண்டு கட்டளைக் கல் [5] போன்ற வட்டமான அரங்குக்கோடு போட்டுக்கொண்டு அதில் விளையாடும் விளையாட்டு நெல்லிவட்டு. [6]
 • வட்டு – ஈட்டுவட்டு – gathering marbles காய்ந்து கிடந்த ஓமை மரத்தடிப் பாறையில் நெல்லிக்காய்களைக் குவித்து வைத்துச் சிறுவர்கள் ஆடிய விளையாட்டு ஈட்டுவட்டு. [7]
 • வட்டு – உருட்டுவட்டு – rolling marbles (1) தாயம் உருட்டுதல், (2) கோலியை ஒரு கட்டத்துக்குள் உருட்டி விளையாடும் பேந்தாக்குண்டு விளையாட்டு.
 • வட்டு – கைகரப்புவட்டு – steeling dies பொழுதுபோக்காக அரசன் தம்பியிம், புலவரும் சூதாடும்போது புலவர் சூதுக்காயைக் கைக்குள் மறைத்து ஆடினாராம். இது கைகரப்பு வட்டு. [8]
 • வட்டு – கையாடுவட்டு – marble throwing காயா மரத்தில் ஏறிப் படர்ந்து பூத்திருக்கும் காந்தள் பூவின்மேல் அமர்ந்திருக்கும் வண்டு கையாடு வட்டு போல இருக்கும். உள்ளங்கையில் கோலிக்குண்டை வைத்து உருட்டி ஆடும் 'பேந்தாக் கோலிக்குண்டு விளையாட்டை இது நினைவூட்டுகிறது. [9]
 • வட்டு – கோட்டுவட்டு – marble throwing in a spot ஆமை அடும்புக் கொடியை அறுத்து அங்குள்ள மணலில் மறைத்து வைக்கும் முட்டை கோட்டுவட்டு அளவினதாக இருக்கும். [10]

பொழுதுபோக்கு வட்டுதொகு

 • வட்டுப் பொருதல் - வல்லு, வல்லநாய் - amatur dice

சூதுவட்டுதொகு

 • வட்டு – சூதுவட்டு, – gambling dies புலவரும் அரசன் தம்பியும் ஆடியபோது புலவர் கையில் வட்டுக்காயை மறைந்து விளையாடிய வட்டு விளையாட்டு [11] சூதாட்ட வட்டாகவும் இருக்கலாம்.

நீச்சல்வட்டுதொகு

அடிக்குறிப்புதொகு

 1. நெல்லி மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப (அகநானூறு 5)
 2. யாமை மறைத்து ஈன்று, புதைத்த கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை (அகநானூறு 160)
 3. அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை (நற்றிணை 193)
 4. வேட்டையாடக் கற்றுக்கொள்ளாத சிறுவர்கள்
 5. தங்கத்தை உரசி மாற்றுப் பார்க்கும் கல்
 6. ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
  பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
  கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,
  கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
  வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர் (நற்றிணை 3)
 7. முளிந்த வோமை முதையலங் காட்டுப்
  பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
  மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப (அகநானூறு 5)
 8. தாமப்பல் கண்ணனார், சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானோடு வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு எறிந்தானைச் , 'சோழன் மகன் அல்லை' என, நாணியுருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது. (புறநானூறு 43)
 9. காயா மென் சினை தோய நீடிப்
  பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்
  அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி
  கை ஆடு வட்டின் தோன்றும் (அகநானூறு 108)
 10. அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்
  குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,
  நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
  கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
  பார்ப்பு இடன் ஆகும் (அகநானூறு 160)
 11. புறநானூறு 43


"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டு_விளையாட்டு&oldid=1420943" இருந்து மீள்விக்கப்பட்டது