வட மாகாண சபையின் கொடி

வட மாகாண சபையின் கொடி என்பது, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளுள் ஒன்றான வட மாகாண சபைக்கான கொடி ஆகும். இது 2007ம் ஆண்டு மே 22ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1][2]


வட மாகாண சபை
பயன்பாட்டு முறை Civil and state கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
அளவு 1:2
ஏற்கப்பட்டது 22 மே 2007
வடிவம் நீலக் கரையினால் சூழப்பட்ட சிவப்பு, வெள்ளை, பச்சை நிறப் பட்டைகளுடன், நடுவில் சூரியனின் சின்னம்.

வரலாறு

தொகு

1987ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி, இலங்கையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வட மாகாணமும், கிழக்கு மாகாணமும் தற்காலிகமாக இணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற பெயரில் ஒரு மாகாண சபை அமைக்கப்பட்டது. இதற்கு ஒரு கொடி இருந்தது. 2007 ஆம் ஆண்டில் இலங்கை நீதிமன்றம் ஒன்று வடக்கு, கிழக்கு மாகாண இணைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது எனத் தீர்ப்பளித்ததால், வடக்கு கிழக்கு மாகாண சபை, வட மாகாண சபை, கிழக்கு மாகாண சபை என இரண்டு மாகாண சபைகளாக ஆனது.[3]

இதனால் இரண்டு மாகாணங்களுக்கும் தனித்தனியான கொடிகள் தேவைப்பட்டன. இதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டில் வட மாகாண சபைக்கும், கிழக்கு மாகாண சபைக்குமாக இரண்டு கொடிகள் வெளியிடப்பட்டன. அக்காலத்தில், கிழக்கு மாகாணத்தின் ஆளுனராகவும், வட மாகாணத்தின் பதில் ஆளுனராகவும் நியமிக்கப்பட்டிருந்த ரியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம திருகோணமலையில் இந்தக் கொடிகளை 2007 மே மாதம் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற விழாவொன்றில் இரண்டு மாகாண சபைகளினதும் முதன்மைச் செயலாளர்களிடம் கையளித்தார்.[1]

அமைப்பு

தொகு

126 x 72 சமீ அளவு கொண்ட வட மாகாண சபைக்கான கொடி நான்கு நிறங்களால் ஆனது. கொடியின் நான்கு பக்கங்களிலும் அதன் விளிம்பை ஒட்டி நீல நிறக் கரை அமைந்துள்ளது. உட்பகுதி, இடமிருந்து வலமாக சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய நிறங்களில் நிலைக்குத்தான மூன்று பட்டைகளால் நிரப்பப்பட்டுள்ளது. நடுவில் உள்ள வெள்ளிப் பட்டையின் நடுப் பகுதியில் 24 கதிர்களைக் கொண்ட வட்டமான சூரியனின் வடிவம் உள்ளது.

நீலநிறக் கரை கடல்சார் வளங்களைக் குறிக்கிறது. பச்சை நிறப் பட்டை வேளாண்மையையும், பசுமையையும் ஒருங்கே குறிக்கிறது. சிவப்பு நிறம் கடின உழைப்புக்கும், பெரு முயற்சிக்கும் குறியீடாக அமைகிறது. வெண்ணிறப் பட்டி சகோதர மனப்பான்மை, சமாதானம், உடனொத்து வாழ்தல் என்பவற்றைக் குறிப்பிடுகிறது. நடுவில் உள்ள கதிரவனின் குறியீடு ஒருமித்துத் தொழிற்படும் சக்தி, இயற்கைச் சக்தி வளங்கள் என்பவற்றைச் சுட்டுகிறது.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Gunananda, A.T.M. "North and East get separate flags". Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
  2. "Separate flags for North and East Provincial Councils". TamilNet. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
  3. "Two separate flags for de-merged NPCand EPC". The Island. Archived from the original on 3 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Macdonald, Ian. "Northern Province (Sri Lanka)". FOTW. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
  5. "The Flag of Northern Provincial Council". Northern Provincial Council. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_மாகாண_சபையின்_கொடி&oldid=3570529" இலிருந்து மீள்விக்கப்பட்டது