சரக்குக் கப்பல்

(வணிகக் கப்பல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சரக்குக் கப்பல் என்பது ஒரு துறைமுகத்தில் இருந்து இன்னொரு துறைமுகத்துக்குச் சரக்கு, மற்றும் பல்வேறு பொருட்களைக் காவிச் செல்லும் கப்பலாகும். பெருமளவிலான அனைத்துலக வணிகம் கப்பலூடாகவே நடைபெறுவதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சரக்குக் கப்பல்கள் உலகின் கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் பயணம் செய்கின்றன. சரக்குக் கப்பல்கள் பொதுவாக அவற்றின் தேவைக்கேற்ப விசேடமாக வடிவமைப்புச் செய்யப்படுகின்றன. பொருட்களை ஏற்றி இறக்கும் வசதிக்காக அவற்றில் பாரந் தூக்கிகளும் பொருத்தப்படுவதுண்டு. சரக்குக் கப்பல்கள் பல்வேறு அளவுகளிலும் காணப்படுகின்றன.[1][2][3]

ஹப்பாக் லொயிட் (Hapag-Lloyd) கொள்கலன் கப்பல்

வகைகள்

தொகு

சரக்குக் கப்பல்களில் பல சிறப்பு வகைகள் உள்ளன. கொள்கலன் கப்பல்கள், தொகை காவிகள் (bulk carriers), தாங்கிக் கப்பல்கள் (tankers) என்பன இவற்றுள் அடங்குவன.

வரலாறு

தொகு

கி.மு முதலாவது ஆயிரவாண்டுத் தொடக்கத்திலேயே, வணிகத்துக்காகப் பொருட்களை இடத்துக்கிடம் நீர் வழிகள் மூலமாக எடுத்துச் செல்லும் வழக்கம் பரவலாக நிலவியதைத் தொல்லியல் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. கடல் மூலமாகப் பொருட்களை நீண்ட தூரங்களுக்கு எடுத்துச் செல்லும் ஆர்வமும், ஆண்டின் எல்லாக் காலங்களிலும் கடற்பயணம் நடத்த வேண்டியதன் தேவையும், மத்திய காலத்தில் கப்பல் வடிவமைப்பில் புதுமைகளைப் புகுத்தின.

கடற் கொள்ளைகள் காரணமாக, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்னரேயே பெரும்பாலான சரக்குக் கப்பல்களில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டன. மணிலா கலியன் (Manila galleons), ஈஸ்ட் இண்டியாமென் (East Indiamen) போன்ற கப்பல்கள் பெருமளவு ஆயுதங்கள் பொருத்தப்பட்டுக் காணப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Article: from publication on types of Reefer Ships by Capt. Pawanexh Kohli" (PDF). Archived from the original (PDF) on March 26, 2009.
  2. "Understanding Lumber Carrier Vessels". Marine Insight. July 13, 2021. பார்க்கப்பட்ட நாள் 28 February 2024.
  3. "The New Panamax; 13,200-TEU Containership, 120,000 dwt Bulk Carrier". Shipping Research and Finance. September 12, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரக்குக்_கப்பல்&oldid=4098707" இலிருந்து மீள்விக்கப்பட்டது