வண்டாம்பாளை மகாமாரியம்மன் கோயில்
வண்டாம்பாளை மகாமாரியம்மன் கோயில் என்பது திருவாரூர் மாவட்டத்தில் வண்டாம்பாளை கிராமத்தில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். [1] இக்கோயிலில் அருகருகே கருப்பாயி அம்மன், பேச்சியாயி அம்மன் ஆகிய தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன.
குழந்தை இல்லாத தம்பதிகள் இக்கோயிலிலுள்ள கருப்பாயி அம்மனை வணங்குகிறார்கள். இச்சன்னதியில் அம்மனின் காலடியில் அரசி மற்றும் மஞ்சள் வைத்து பூசித்து தரப்படுகிறது. இந்த அரசியை உலையில் உணவுக்காக இடும் அரிசியோடு இணைத்து சோறாக்கி உண்கிறார்கள். மஞ்சளை அரைத்துப் பூசி வருகிறார்கள். இவ்வாறு செய்தால் ஒரு மண்டலத்தில் குழந்தை உருவாகும் என்பது நம்பிக்கையாகும். [2]
சன்னதிகள்
தொகுஇக்கோயிலில் கருப்பாயி அம்மன், பேச்சியாயி அம்மன் ஆகிய தெய்வங்கள் வடக்கு நோக்கி அமைந்துள்ளன. கருப்பாயி அம்மன் குழந்தையுடன் உள்ளார். கல்லுடயான் சாமி, யானை மீது அமர்ந்திருக்கும் கருப்பண்ணசாமி ஆகிய தெய்வங்களும் இக்கோயிலில் உள்ளன. மகா மண்டபத்தின் இடது பக்கத்தில் காத்தவராயன் - ஆர்யமாலா - பொம்மி, தொட்டிக்கட்டி, சின்னான் போன்ற சிறு தெய்வங்களும் அமைந்துள்ளன.
திருவிழாக்கள்
தொகுசித்திரை மாதம் பௌர்ணமிக்கு பத்து நாட்கள் முன்பு இக்கோயிலில் திருவிழா தொடங்குகிறது.