வண்ணச் சொற்கள்

எழுத்தறிவித்தல் அணுகுமுறை

வண்ணச் சொற்கள் (Words in Colour) என்பது முனைவர் காலேப் கட்டெக்னோவால் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்தறிவுக்கான ஓர் அணுகுமுறையாகும்.[1] முதன்முதலில் 1962 ஆம் ஆண்டில் வண்ணத்தில் சொற்கள் வெளிவந்தன. ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரே நேரத்தில் இது வெளியிடப்பட்டது. பிந்தைய பதிப்புகள் பிரெஞ்சு மொழியிலும் எசுப்பானிய மொழியிலும் வெளியிடப்பட்டன.[2]

"விக்கிப்பீடியா கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற சொற்கள் வண்ணத்தில் சொற்கள் என்ற அணுகுமுறையுடன் எழுதப்பட்டுள்ளது.

வண்ணச் சொற்கள் என்பது ஒரு செயற்கை ஒலியியல் அமைப்பாகும். எழுத்துக்களின் ஒலிப்பு பண்புகளைக் குறிக்க இம்முறை வண்ணத்தைப் பயன்படுத்துகிறது.[3] இந்த அமைப்பு காதுகேளாத குழந்தைகள்,[4] வாசிப்புக் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக[3] பயன்படுத்தப்பட்டது. வண்ணத்தில் கதை படித்தல், வண்ண ஒலிப்புத் திட்டம், ஆங்கில வண்ணக் குறியீடு போன்ற பல வண்ண உதவி கல்வித் திட்டங்களில் வண்ணத்தில் சொற்கள் என்ற அணுகுமுறையும் ஒன்றாகும்.[5]

இதையும் காண்க

தொகு
  • Teacher's Guide to Words in Colour Gattegno.

மேற்கோள்கள்

தொகு
  1. Brenda Hopkin (November 1964). "Eight Hours to Literacy". Schools and College. 
  2. Words in Colour Catalogue. The Cuisenaire Company. 1973. 
  3. 3.0 3.1 Stringer, Bobrow and Linn (9 May 2011). "Jacob, a case study of dyslexia in Canada". In Peggy L. Anderson; Regine Meier-Hedde (eds.). International Case Studies of Dyslexia. Routledge. p. 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-73592-9.
  4. Sister Caterina, O.P.. Words in Colour for the Deaf. Educational Explorers. 
  5. Experiments and Innovations in Education (Unesco Press) (1–9): 18–20. 1973. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணச்_சொற்கள்&oldid=3389428" இலிருந்து மீள்விக்கப்பட்டது