வத்திக்கான் நகரின் தேசியக் கொடி
வத்திக்கான் நகரின் தேசியக் கொடி என்பது, சூன் 7, 1929 அன்று திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் கையொப்பம் இடப்பட்ட இலாதிரன் உடபடிக்கையின் படி ஒப்புக்கொள்ளப்பட்ட கொடியாகும். இது முன்னமே இருந்த திருத்தந்தை நாடுகளின் கொடியிலிருந்து வடிவமைக்கப்பட்டதாகும்.
பயன்பாட்டு முறை | தேசியக் கொடி |
---|---|
அளவு | 1:1 |
ஏற்கப்பட்டது | ஜூன் 7, 1929 |
வடிவம் | சதுரம் சமமாக பிரிக்கப்பட்டு, இடப்புறம் தங்க நிறத்திலும், வலப்புறம் திருப்பீட சின்னம் நடுவில் உள்ள வெள்ளை நிறமும் கொண்டுள்ளது. |
கொடியின் சிறப்பு பண்புகள்
தொகுஉலகிலேயே சதுரமாக இருக்கும் இரு தேசியக் கொடிகளுள் இதுவும் ஒன்று. மற்றொன்று சுவிட்சர்லாந்து நாட்டின் கொடியாகும்.
இக்கொடி சதுர வடிவுள்ளதாகும். அச்சதுரம் சமமாக பிரிக்கப்பட்டு, இடப்புறம் மஞ்சள் அல்லது தங்க நிறத்திலும். வலப்புறம் திருப்பீட சின்னம் நடுவில் உள்ள வெள்ளை நிறமும் கொண்டுள்ளது. திருப்பீடச் சின்னமானது பதினொன்றாம் பயஸால் பயன்படுத்தப்பட்ட மும்முடியையும், புனித பேதுருவின் சாவியும் இருக்கும். இது தங்கம் மற்றும் வெள்ளியாலான இரு சாவிகளாகும். விண்ணுலகிலும் (தங்கம்) மற்றும் மண்ணுலகிலும் (வெள்ளி) அனுமதிக்கவும், தடைசெய்யவும் திருத்தந்தைக்கு உள்ள அதிகாரத்தைக் இது குறிக்கும்.
திருத்தந்தை நாடுகளின் கொடிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Bandiera pontificia". Stato della cità del Vaticano. Archived from the original on 2008-10-15. பார்க்கப்பட்ட நாள் 2008-07-09.
Anticamente la bandiera dello Stato pontificio era giallorossa (o per meglio dire amaranto e rossa, colori derivati dai colori dello stemma della Santa Sede), i due colori tradizionali del Senato e del Popolo romano, che vennero tuttavia sostituiti con il bianco e il giallo nel 1808, allorché Pio VII
(இத்தாலியம்)
வெளி இணைப்புகள்
தொகு- Vatican City at Flags of the World
- Flag of Vatican City by Rev. William M. Becker