வந்தார்கள் வென்றார்கள் (நூல்)
வந்தார்கள் வென்றார்கள் பிரபல எழுத்தாளரும் கார்ட்டுனிஸ்ட்டுமான மதன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூலாகும். இதனை ஜுனியர் விகடன் தொடராக வெளியிட்டது. மக்களின் வரவேற்பினைப் பெற்ற இத்தொடர், விகடன் பதிப்பகத்தாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கு எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை எழுதியிருந்தார்கள்.
நூலாசிரியர் | மதன் |
---|---|
அட்டைப்பட ஓவியர் | ஓவியர் அரஸ் பொன்ஸீ |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | வரலாற்று நூல் |
வெளியீட்டாளர் | விகடன் பிரசுரம் |
வெளியிடப்பட்ட நாள் | ஜனவரி 1994 |
ஊடக வகை | நூல் ஒலிப்புத்தகம் |
பக்கங்கள் | 185 |
தைமூர் வரலாற்றிலிருந்து, இந்தியாவினை ஆண்ட பாபர், அக்பர் முதலானோர்களின் வரலாற்றினையும் இந்நூல் விவரிக்கிறது.
பாலசுப்ரமணியன் கருத்து
தொகுவிகடன் ஆசிரியரான பாலசுப்ரமணியன் இத்தொடர் ஜூனியர் விகடனில் வரதொடங்கிய போது வடஇந்தியாவில் பாபர் மசூதி சர்ச்சை பெரிய அளவில் இருந்ததாக குறிப்பிடுகிறார்.
ஒலிப்புத்தகம்
தொகுவந்தார்கள் வென்றார்கள் நூலை கிழக்குப் பதிப்பகம் ஒலிப் புத்தக வடிவிலும் வெளியிட்டிருக்கிறது.