வந்தேமாதரம் சீனிவாசு

இந்திய இசையமைப்பாளர்

தொழில்ரீதியாக வந்தேமாதரம் சீனிவாசு என்று அழைக்கப்படும் கண்ணேபோயின சீனிவாச ராவ் யாதவ் ( Kanneboina Srinivasa Rao Yadav ) ஓர் இந்திய இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் ஆறு நந்தி விருதுகளையும் வென்றுள்ளார்.[1] வந்தே மாதரம் (1985) படத்தின் தலைப்புப் பாடலை எழுதியலிருந்து "வந்தேமாதரம்" என்ற முன்னொட்டைப் பெற்றார். [2]

வந்தேமாதரம் சீனிவாசு
இயற்பெயர்கண்ணேபோயின சீனிவாச ராவ் யாதவ்
பிறப்பு9 செப்டம்பர் 1964 (1964-09-09) (அகவை 60)
கம்மம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசைத்தட்டுத் தயாரிப்பாளர், பாடகர், நடிகர், இயக்குநர்.
இசைக்கருவி(கள்)விசைப்பலகை.
இசைத்துறையில்1985–தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

வந்தேமாதரம் சீனிவாசு, கண்ணேபோயின சீனிவாச ராவ் என்ற பெயரில் [3] தெலங்காணாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பிறந்தார். [4]

விருதுகள்

தொகு
  • சிறந்த இசை அமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு - ஓசே ராமுலம்மா [5] [6] (1997)
  • சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருது – ஆஹா..! [7] (1998)

நந்தி விருது

தொகு
  • சிறந்த இசையமைப்பாளர் : ஓசே ராமுலம்மா (1997)
  • சிறந்த இசையமைப்பாளர் : சுயம்வரம் (1999)
  • சிறந்த இசையமைப்பாளர் : தேவுல்லு (2000)
  • சிறந்த ஆண் பின்னணி பாடகர் : ஓரே ரிக்சா (1995) [8] இருப்பினும் இவ்விருதை நிராகரித்தார்.
  • சிறந்த ஆண் பின்னணி பாடகர் : ஸ்ரீ ராமுலய்யா (1998)
  • சிறந்த ஆண் பின்னணி பாடகர்: தண்டகாரண்யம் (2016)

மேற்கோள்கள்

தொகு
  1. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.(in Telugu)
  2. Narasimham (2017-08-07). "'Vandemataram', the song that became a surname for singer Srinivas". The Hindu. https://www.thehindu.com/entertainment/music/c-narayana-reddys-forceful-lyric-not-only-gave-the-film-its-title-but-also-a-new-surname-to-srinivas-vandemataram/article19444358.ece. 
  3. "సంగీత అకాడమీ చైర్మన్‌గా వందేమాతరం శ్రీనివాస్‌". lit.andhrajyothy.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-05.
  4. "జర్నలిస్టులే నాకు ఈ పేరు పెట్టారు". Andhra Jyothy (in தெலுங்கு). 10 December 2015. பார்க்கப்பட்ட நாள் 2021-08-05.
  5. "45th Filmfare South Best Music Directors : Santosh : Free Download & …". Archived from the original on 5 February 2017.
  6. "45th Filmfare South Music Directors Playbacksinger Winners Photo : Sa…". Archived from the original on 5 February 2017.
  7. "The Winners - Best Playback Singer" (JPG).
  8. "నంది అవార్డు విజేతల పరంపర (1964 - 2008)" [A series of Nandi Award Winners (1964 - 2008)] (PDF) (in தெலுங்கு). Information & Public Relations of Andhra Pradesh. 2010-03-13. p. 38. Archived (PDF) from the original on 23 February 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தேமாதரம்_சீனிவாசு&oldid=3923241" இலிருந்து மீள்விக்கப்பட்டது