வந்தே மாதரம் திட்டம்
வந்தே மாதரம் திட்டம் (vandemataram scheme) என்பது தனியார் மற்றும் அரசின் ஒன்றிணைந்த பங்களிப்பில் இந்தியாவில் உள்ள கருவுற்ற தாய்மார்களுக்கு இலவசமாகப் பேறுகால முன்கவனிப்பு (antenatal care) வழங்க இந்திய அரசால் ஏற்படுத்தப்பட் ஒரு நலத்திட்டம் ஆகும். குறைந்த பட்சம் எம்.பி.பி.எஸ் படித்த எந்த ஒரு மருத்துவரும் இத்திட்டத்தில் பங்களிக்க முன்வரலாம். இத்திட்டத்தில் இணைந்த மருத்துவரின் மருத்துவமனையில் வந்தே மாதரம் சின்னம் இருக்கும். பேறுகாலத் தாய்மார்கள் இந்த வந்தே மாதரம் மருத்துவமனைகளில் இரும்புச் சத்து - ஃபோலிக் அமில மாத்திரைகள், இரணஜன்னி (tetanus toxoid) தடுப்பூசி ஆகிய சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய உதவும் கர்ப்பத்தடை மாத்திரைகளும் இங்கு இலவசமாய்க் கிடைக்கும்.