வனிதா (இதழ்)

வனிதா என்ற பெயரில் அமைந்துள்ள கட்டுரைகளுக்கு, வனிதா என்ற பக்கத்தை பார்க்கவும்

வனிதா (Vanitha) என்பது மலையாள மனோரமா பத்திரிக்கைக் குழுவால் மாதத்திற்கு இரண்டு முறை வெளியிடப்பட்ட ஒரு இந்திய இதழ் ஆகும். தணிக்கை பணியகத்தின் படி புழக்கத்தில் இது இந்தியாவின் மிகப்பெரிய பத்திரிகையான இது சராசரியாக 687,915 பிரதிகள் (2013 திசம்பர் நிலவரப்படி) விற்பனையாகின்றது. [1] இது 2017 ஆம் ஆண்டிலும் புழக்கத்தில் மிக அதிக அளவு விற்பனையில் தொடர்கிறது [2]

'
வகைபெண்கள் இதழ்
இடைவெளிமாதம் இருமுறை
நுகர்வளவு687,915 (2013 திசம்பர் நிலவரப்படி)[1]
தொடங்கப்பட்ட ஆண்டு1975; 49 ஆண்டுகளுக்கு முன்னர் (1975)
நிறுவனம்மலையாள மனோரமா நிறுவனம்
நாடுஇந்தியா
அமைவிடம்கோட்டயம்
மொழிமலையாளம்
வலைத்தளம்www.vanitha.in

வரலாறு

தொகு

வனிதா 1975 ஆம் ஆண்டில் ஒரு மாதந்திர இதழாகத் தொடங்கப்பட்டது [3] [4] பின்னர், 1987 இல் பதினைந்து தினங்களுக்கொருமுறை வெளிவரும் இதழாக மாறியது. சமூக சேவை, சமையல், பத்திரிகை, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான பங்களிப்பு செய்த கே.எம். மேத்யூ என்பவரின் மனைவி அன்னம்மா மேத்யூ என்பவர் இந்த பத்திரிகையை நிறுவினார். வனிதா முதலில் மலையாளத்தில் வெளியிடப்பட்டது. பின்னர், 1997 இல் இந்தி பதிப்பை அறிமுகப்படுத்தியது. </ref> இதன் பெயர் மலையாளத்தில் "பெண்" என்று மொழிபெயர்க்கப்பட்டாலும், அதில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. மேலும் அதெல்லாம் கண்டிப்பாக பெண்கள் இதழ் அல்ல.

வனிதா கோட்டையத்தைச் சேர்ந்த எம்.எம். பதிப்பகம் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது. [5] எம்.எம் பதிப்பகம் மலையாள மனோரமா குழுமத்தின் ஒரு பகுதியாகும். [6] மாதத்திற்கு இரண்டு முறை வெளியிடப்படுவதோடு மட்டுமல்லாமல், ஓணம், ஈஸ்டர், புத்தாண்டு தினம், கிறிஸ்துமஸ் .ஆகியவற்றிற்கான சிறப்பு இரட்டை பதிப்புகளையும் வனிதாவில் வெளியிடப்பட்டது.

2000 ஆவது ஆண்டு சூலை, திசம்பர் இடையே வனிதா 3,82,027 பிரதிகள் விற்று, இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் பத்திரிகையாக இருந்தது. [6] 2012 ஆம் ஆண்டில், பத்திரிகையின் மலையாள பதிப்பிற்கு 2.27 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்கள் இருந்தனர். இது இந்தியாவில் அதிக வாசிப்பு இதழாக அமைந்தது. [7]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Details of most circulated publications for the audit period July - December 2013" (PDF). Audit Bureau of Circulations. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.
  2. http://www.printweek.in/news/irs-2017-vanitha-continues-lead-regional-language-magazines-27929
  3. "Of recipes and G-spots: On India's 'magazine era'". dna. http://www.dnaindia.com/lifestyle/report-of-recipes-and-g-spots-on-india-s-magazine-era-2105879. பார்த்த நாள்: 25 September 2016. 
  4. The Far East and Australasia 2003. பார்க்கப்பட்ட நாள் 28 October 2016.
  5. The Far East and Australasia 2003. Psychology Press.
  6. 6.0 6.1 "Chitralekha Group to launch its first women's magazine". http://www.afaqs.com/news/story/3078_Chitralekha-Group-to-launch-its-first-womens-magazine. 
  7. "IRS 2012 Q3 Topline Findings" (PDF). Media Research Users. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனிதா_(இதழ்)&oldid=3459362" இலிருந்து மீள்விக்கப்பட்டது