வனேடியம்(II) புளோரைடு

வேதிச் சேர்மம்

வனேடியம்(II) புளோரைடு (Vanadium(II) fluoride) என்பது VF2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீலநிற படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது.

வனேடியம்(II) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
வனேடியம்(II) புளோரைடு
Vanadium(II) fluoride
இனங்காட்டிகள்
13842-80-3
InChI
  • InChI=1S/2FH.V/h2*1H;/q;;+2/p-2
    Key: XHZLWOBYMWIKHM-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101602874
SMILES
  • [F-].[F-].[V+2]
பண்புகள்
F2V
வாய்ப்பாட்டு எடை 88.94 g·mol−1
தோற்றம் நீலநிறப் படிகங்கள்

[1]

நீரில் கரையும், [V(H2O)6]2+ அயனியாக மாறும்[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

1150 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஐதரசன் புளோரைடு வாயுச் சூழலில் ஐதரசனை உபயோகித்து வனேடியம் முப்புளோரைடை குறைத்தல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் வனேடியம்(II) புளோரைடை உற்பத்தி செய்யலாம்:[3]

2 VF3 + H2 -> 2 VF2 + 2 HF

பண்புகள் தொகு

இயற்பியல் பண்புகள் தொகு

வனேடியம்(II) புளோரைடு நாற்கோணகப் படிக அமைப்பில் P42/mnm (எண். 136) என்ற இடக்குழுவுடன் a = 480.4 பைக்கோமீட்டர் மற்றும் c = 323.7 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுரு மாறிலிகளுடன் படிகமாகிறது.[4]

வேதிப் பண்புகள் தொகு

வனேடியம்(II) புளோரைடு ஒரு வலுவான குறைக்கும் முகவராகும். இது மெக்னீசியம் ஐதராக்சைடு முன்னிலையில் நைட்ரசனை ஐதரசீனாகக் குறைக்கிறது.[2]

தண்ணீரில் கரைந்து [V(H2O)6]2+ அயனிகளாக மாறுகிறது.[2]

V2+ + 6 H2O → [V(H2O)6]2+

மேற்கோள்கள் தொகு

  1. "WebElements Periodic Table » Vanadium » vanadium difluoride". www.webelements.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-16.
  2. 2.0 2.1 2.2 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 1550, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
  3. Lothar Kolditz: Anorganische Chemie Teil 2. VEB Deutscher Verlag der Wissenschaften, Berlin, 1980, S. 641.
  4. J. W. Stout, W. O. J. Boo: Crystalline vanadium (II) fluoride, VF2. Preparation, structure, heat capacity from 5 to 300 K and magnetic ordering. In: The Journal of Chemical Physics. 71, 1, 1979, S. 1–8, எஆசு:10.1063/1.438115.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடியம்(II)_புளோரைடு&oldid=3915400" இலிருந்து மீள்விக்கப்பட்டது