வனேடியம்(III) சல்பேட்டு
வனேடியம்(III) சல்பேட்டு (Vanadium(III) sulfate) என்பது V2(SO4)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் பெரும்பாலான வனேடியம்(III) சேர்மங்களில் இருந்து மாறுபட்டு காற்றில் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. தண்ணீரில் மெதுவாகக் கரைந்து பச்சை நிறத்தினாலான நீரயனி அணைவுச் சேர்மத்தைக் ([V(H2O)6]3+)கொடுக்கிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வனேடியம்(III) சல்பேட்டு
| |
வேறு பெயர்கள்
வனேடியம் முச்சல்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13701-70-7 | |
ChemSpider | 19990317 |
EC number | 237-226-6 |
பப்கெம் | 166888 |
பண்புகள் | |
V2(SO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 390.074 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் நிறத்தூள் |
உருகுநிலை | 400 °C (752 °F; 673 K) சிதைவடையும் |
சிறிதளவு கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
V2O5 சேர்மத்துடன் கந்தக அமிலம், தனிமநிலை கந்தகம் சேர்த்து சூடுபடுத்தினால் வனேடியம்(III) சல்பேட்டு தயாரிக்கலாம்.:[2]
- V2O5 + S + 3 H2SO4 → V2(SO4)3 + SO2 + 3 H2O
தனிமநிலை கந்தகத்தால் நிகழும் இந்நிலைமாற்ற ஒடுக்க வினை ஓர் அரிய உதாரணமாகும்.
410 ° செ வெப்பநிலைக்கு அல்லது அதற்குச்சற்று குறைவான வெப்பநிலைக்கு வெற்றிடத்தில் சூடுபடுத்தும் போது இது வனேடைல் சல்பேட்டு மற்றும் கந்தக டை ஆக்சைடாகச் சிதைவடைகிறது. வனேடியம்(III) சல்பேட்டு காற்றில் நிலைப்புத் தன்மையுடன் காணப்படாலும் நீண்ட நாட்களுக்கு ஈரமான காற்றில் இருக்க நேர்ந்தால் பச்சை நிறத்திலான நீரேற்று வடிவமாக மாறுகிறது.
வனேடியம்(III) சல்பேட்டு ஓர் ஆக்சிசன் ஒடுக்கியாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–93, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ Robert T. Claunch, Mark M. Jones "Vanadium(III) Sulfate" Inorganic Syntheses, 1963, Volume 7, pages 92–94. எஆசு:10.1002/9780470132388.ch28