வனேடைல் ஐசோபுரோப்பாக்சைடு
வேதிச் சேர்மம்
வனேடைல் ஐசோபுரோப்பாக்சைடு (Vanadyl isopropoxide) என்பது VO(O-iPr)3 (iPr = CH(CH3)2) என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். வனேடியத்தின் பொதுவான அல்காக்சைடான இச்சேர்மம் மஞ்சள் நிறத்தில் எளிதில் ஆவியாகும் நீர்மமாகக் காணப்படுகிறது. வனேடியம் ஆக்சைடுகள் தயாரிப்பதற்கு உதவம் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் ஒரு வினையாக்கியாகவும் இது பயன்படுகிறது.[1] வனேடைல் ஐசோபுரோப்பாக்சைடு எதிர்காந்தப் பண்பை கொண்டதாக உள்ளது. வனேடியம் ஆக்சி டிரைகுளோரைடை ஆல்க்ககாலாற் பகுப்பு வினைக்கு உட்படுத்தி இது தயாரிக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மூவைசோபுரோப்பாக்சிவனேடியம்(V) ஆக்சைடு; வனேடியம்(V) மூவைசோபுரோப்பாக்சைடு ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
5588-84-1 | |
ChemSpider | 21171176 |
EC number | 226-997-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 79702 |
| |
பண்புகள் | |
C9H21O4V | |
வாய்ப்பாட்டு எடை | 244.20 g·mol−1 |
உருகுநிலை | −14 முதல் −11 °C (7 முதல் 12 °F; 259 முதல் 262 K) |
கொதிநிலை | 242 °C (468 °F; 515 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H315, H319, H335 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P280, P302+352, P303+361+353, P304+340, P305+351+338 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- VOCl3 + 3 HOCH(CH3)2 → VO(OCH(CH3)2)3 + 3 HCl
தொடர்புடைய வளையபெண்டனாக்சைடு VO(O-CH(CH2)4)3 என்பது ஓர் இருபடியாகும். ஒரு சோடி அல்காக்சைடு ஈந்தணைவிகள் வனேடைல் ஆக்சிசனுடன் மறுபக்கத்தில் பலவீனமாக பிணைக்கப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Krumeich, F.; Muhr, H.-J.; Niederberger, M.; Bieri, F.; Schnyder, B.; Nesper, R. (1999). "Morphology and Topochemical Reactions of Novel Vanadium Oxide Nanotubes". Journal of the American Chemical Society 121 (36): 8324–8331. doi:10.1021/ja991085a.
- ↑ Hillerns, Frank; Olbrich, Falk; Behrens, Ulrich; Rehder, Dieter (1992). "Tris(cyclopentanolato)oxovanadium(V): A Model for the Transition State of Enzymatic Phosphoester Cleavage". Angewandte Chemie International Edition in English 31 (4): 447–448. doi:10.1002/anie.199204471.