வனேடைல் பெர்குளோரேட்டு
வனேடைல் பெர்குளோரேட்டு அல்லது வனேடைல் முப்பெர்குளோரேட்டு (Vanadyl perchlorate or vanadyl triperchlorate) என்பது VO(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது தங்கமஞ்சள் நிறத்தில் திரவமாகவும் அல்லது வனேடியம், ஆக்சிசன் மற்றும் பெர்குளோரேட்டு குழுவின் படிகச் சேர்மமாகவும் இருக்கிறது. இச்சேர்மத்தில் உள்ள மூலக்கூறுகள் சகப்பிணைப்பு கொண்டு துரிதமாக ஆவியாகும் நிலையில் உள்ளன.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
முப்பெர்க்குளோரேட்டு ஆக்சோவனேடியம்
| |
இனங்காட்டிகள் | |
67632-69-3 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
VO(ClO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 356.29 கி/மோல் |
தோற்றம் | தங்கமஞ்சள் திரவம் அல்லது படிகங்கள். |
உருகுநிலை | 21-22 °செ |
கொதிநிலை | 33.5 °செ வெற்றிடத்தில் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆக்சிசனேற்றி |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவனேடியம் ஐந்தாக்சைடுடன் இரு குளோரின் ஏழாக்சைடை 5° செல்சியசு வெப்பநிலையில் சேர்த்து சூடாக்கினால் வனேடைல் பெர்குளோரேட்டு உருவாகிறது. வெற்றிடத்தில் இதைக் காய்ச்சி வடித்து பின்னர் 21° செல்சியசு வெப்பநிலையில் மீள்படிகமாக்கல் வினைக்கு உட்படுத்தி தூய்மையாக்கப்படுகிறது.[1]
பேரியம் பெர்குளோரேட்டுடன் வனேடைல் சல்பேட்டைச் சேர்த்து வினைப்படுத்தினால் வனேடைல் பெர்குளோரேட்டு கரைசல் உருவாகிறது[2]
வனேடியம் ஐந்தாக்சைடை பெர்குளோரிக் அமிலம்|பெர்குளோரிக் அமிலத்தில்]] கரைத்து வனேடியம்(V) பெர்குளோரேட்டு கரைசல் தயாரிக்கலாம்.[3] பெர்வனேடைல் பெர்குளோரேட்டு எனப்படும் ஈராக்சோ வனேடியம் பெர்குளோரேட்டில் VO2+ அயனிகள் காணப்படுகின்றன.[4]
வனேடைல் இருபெர்குளோரேட்டு, ஆக்சோவனேடியம் பெர்குளோரேட்டு அல்லது வனேடியம்(IV) பெர்குளோரேட்டு, VO(ClO4)2 முதலான சேர்மங்கள் நீரில் கரைகின்றன[5][6]. தண்ணீரில் கரைந்த வனேடிக் பெர்குளோரேட்டு கரைசல் பசுமை கலந்த நீல நிறத்துடன் மற்ற வனேடியம்(III) கரைசல்களைப் போல இல்லாமல் வேறுபடுகிறது. அவை அணைவுச் சேர்மங்களாக உள்ளன.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Fedoroff, Basil T; Oliver E Sheffield. Encyclopedia of Explosives and Related Items Vol 10 of 10- U to Z. Vol. 10. p. V5.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Stritar, Jeffery Allan; Taube, Henry (November 1969). "Electron-transfer reactions of ruthenium(III) pentaammines with chromium(II), vanadium(II), europium(II)". Inorganic Chemistry 8 (11): 2281–2292. doi:10.1021/ic50081a013.
- ↑ Kustin, Kenneth; Toppen, David L. (June 1973). "Reduction of vanadium(V) by L-ascorbic acid". Inorganic Chemistry 12 (6): 1404–1407. doi:10.1021/ic50124a038.
- ↑ Ramsey, J. B.; Heldman, M. J. (July 1936). "Kinetics of the Trivalent Vanadium—Iodine Reaction". Journal of the American Chemical Society 58 (7): 1153–1157. doi:10.1021/ja01298a026.
- ↑ Iannuzzi, Melanie M.; Rieger, Philip H. (December 1975). "Nature of vanadium(IV) in basic aqueous solution". Inorganic Chemistry 14 (12): 2895–2899. doi:10.1021/ic50154a006.
- ↑ Wuethrich, K.; Connick, Robert E. (March 1967). "Nuclear magnetic resonance relaxation of oxygen-17 in aqueous solutions of vanadyl perchlorate and the rate of elimination of water molecules from the first coordination sphere". Inorganic Chemistry 6 (3): 583–590. doi:10.1021/ic50049a035.
- ↑ Furman, Sydney C.; Garner, Clifford S. (April 1950). "Absorption Spectra of Vanadium(III) and Vanadium(IV) Ions in Complexing and Non-complexing Media". Journal of the American Chemical Society 72 (4): 1785–1789. doi:10.1021/ja01160a105.