வன்முறை மற்றும் மோசடிக்கு எதிரான ஆண்கள்

பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கும் ஓர் இந்திய ஆண்கள் அமைப்பு

வன்முறை மற்றும் மோசடிக்கு எதிரான ஆண்கள் (Men Against Violence and Abuse) என்பது பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கும் ஓர் இந்திய அமைப்பாகும். 1993 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் பணியாற்றும் நாட்டின் முதல் ஆண்கள் அமைப்பாகும்.

வரலாறு

தொகு

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மோசடிக்கு எதிரான ஆண்கள் அமைப்பு தொடர்பான விளம்பரம் 1991 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள பல இதழ்களில் வெளியிடப்பட்டது. சி.ஒய்.கோபிநாத்து என்ற ஒரு பத்திரிகையாளரால் வெளியிடப்பட்ட இவ்விளம்பரத்துடன் இவ்வமைப்பு தொடங்கியது [1] பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்க்க விரும்பும் ஆண்களை சேர்க்க இவ்விளம்பரம் வெளியிடப்பட்டது. 205 ஆண்கள் இதற்கு ஆதரவாகப் பதிலளித்தனர். [1] இத்தகைய ஆண்கள் ஒரு வருடம் அல்லது அதற்கு மேலாக சந்தித்து, ஒரு முக்கிய குழுவை உருவாக்கினர். அரிசு சதானி இக்குழுவின் தலைவராக ஆனார். [1] ஆண்களும் பெண்களும் " ஆணாதிக்கத்தின் தளைகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்" என்று குழு உணர்ந்தது. 1993 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் குழு மும்பையில் முறையாக அமைய ஏற்பாடு செய்யப்பட்டது. [1] [2] 1996 ஆம் ஆண்டு இச்சங்கம் மராத்தியில் எழுதப்பட்ட ஆண்களின் வெளிப்பாடுகள் என்ற பத்திரிகையைத் தொடங்கியது, இது ஆண்டுதோறும் தீபாவளியின் போது வெளியிடப்படுகிறது. [3]

சதானி, 2006 ஆம் ஆண்டில் வன்முறை மற்றும் மோசடிக்கு எதிரான ஆண்கள் அமைப்பிற்காக, மக்கள்தொகை குழுவிடமிருந்து யுவ மைத்ரி எனப்படும் ஒரு முன்னோடித் திட்டத்தை உருவாக்க ஒரு முன்னோடித் திட்டத்தை உருவாக்க நிதியுதவியைப் பெற்றார். [3] [4] இந்த திட்டம் இளைஞர்களை ஒரு முகாம் அனுபவத்திற்கு கொண்டு வந்தது, அங்கு அவர்கள் பாலின பாத்திரங்கள் மற்றும் பாலினங்களுக்கிடையிலான உறவுகள் பற்றி விவாதித்து பிரதிபலித்தனர். [3] யுவ மைத்ரி திட்டம் இன்னும் இவ்வமைப்பின் நிரலாக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது மற்றும் 2014 ஆம் ஆண்டில் சுமார் 80,000 இளைஞர்களை சென்றடைந்தது. 500 இளைஞர் வழிகாட்டிகளையும் உருவாக்கியது. [3]

வன்முறை மற்றும் மோசடிக்கு எதிரான ஆண்கள் அமைப்பு மகாராட்டிரா மாநிலத்தில் செயல்படுகிறது. ஆலோசனை, திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கான வழிகாட்டுதல், பெண்களுக்கான தற்காப்பு வகுப்புகள், உதவி எண்னில் அழைப்பு மற்றும் பாலின பிரச்சனைகளைக் கையாளும் பிற பயனுள்ள திட்டங்களை இந்த அமைப்பு வழங்குகிறது. இந்த அமைப்பினரும் பெண்கள் குழுவான அக்சராவும் மும்பை கல்லூரிகளில் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பாலின பிரச்சனைகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். [2] ஆண்கள் தங்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகளை மற்ற ஆண்களிடம் வெளிப்படுத்தவும் இந்த அமைப்பு ஓர் இடத்தையும் வழங்குகிறது. [2]

இங்கா ஆக்டே என்பவர் 2018 ஆம் ஆண்டில் இயக்கிய, ஓர் என்ற ஆவணப்படம், இவ்வமைப்பினர் செய்த சில வேலைகளை விவரிக்கிறது.

மேற்கோள்கள்

தொகு