இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை (Violence against women in India) என்பது ஒரு பெண்ணுக்கு எதிராக நிகழும் உடல் அல்லது பாலியல் வன்முறையைக் குறிக்கிறது. பொதுவாக ஒரு ஆணால். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பொதுவான வன்முறைகளில் குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற செயல்களும் அடங்கும். பெண்களுக்கு எதிரான வன்முறையாகக் கருதப்படுவதற்கு, பாதிக்கப்பட்ட பெண் என்பதால் மட்டுமே இந்தச் செயலைச் செய்ய வேண்டும். பொதுவாக, இந்த செயல்கள் நாட்டில் நீண்டகால பாலின சமத்துவமின்மையின் விளைவாக ஆண்களால் செய்யப்படுகின்றன.

அக்டோபர் 02, 2009 அன்று புதுடில்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான தேசிய பிரச்சாரத்தின் துவக்கத்தில் பல்வேறு தரப்பு பெண்களால் இந்தியாவின் வாயிலில் மனிதச் சங்கிலி உருவாக்கம்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது உண்மையில் முதல் பார்வையில் தோன்றுவதை விட அதிகமாக உள்ளது. ஏனெனில் வன்முறையின் பல வெளிப்பாடுகள் குற்றங்களாக கருதப்படுவதில்லை, அல்லது சில இந்திய கலாச்சார விழுமியங்கள் மற்றும் நம்பிக்கைகள் காரணமாக பதிவு செய்யப்படாமல் அல்லது ஆவணப்படுத்தப்படாமல் போகலாம். இந்த காரணங்கள் அனைத்தும் 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் பாலின சமத்துவமின்மை குறியீட்டு மதிப்பீட்டில் 0.524 க்கு பங்களிக்கின்றன. இது அந்த ஆண்டின் தரவரிசை நாடுகளில் 20% கீழே உள்ளது.[1]

விரிவாக்கம்

தொகு
ஆண்டு புகாரளிக்கப்பட்ட வன்முறை [2]
2008 195,856
2009 203,804
2010 213,585
2011 213,585
2012 244,270

இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 2012இல் 6.4% ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு பெண்ணுக்கு எதிரான குற்றம் நிகழ்கிறது.[3] [4] தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, 2011இல், 228,650க்கும் அதிகமான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2015இல், 300,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது 44% அதிகம்.[3] [5] இந்தியாவில் வாழும் பெண்களில், 7.5% மேற்கு வங்காளத்தில் வாழ்கின்றனர். பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்களில் அங்கு மட்டும் 12.7% நடக்கிறது.[3] இந்தியாவின் பெண் மக்கள்தொகையில் 7.3% ஆந்திராவில் உள்ளது. இங்கு பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்களில் 11.5% ஆகும்.[3]

65% இந்திய ஆண்கள் குடும்பத்தை ஒன்றாக வைத்திருப்பதற்காக பெண்கள் வன்முறையை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று நம்புகிறார்கள். மேலும் பெண்கள் சில சமயங்களில் அடிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் நினைக்கிறார்கள்.[6] சனவரி 2011இல், சர்வதேச ஆண்கள் மற்றும் பாலின சமத்துவ கணக்கெடுப்புபடி 24% இந்திய ஆண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் பாலியல் வன்முறை செய்ததாக தெரிவித்தது. [6] அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்படாததால், வழக்கு நிகழ்வுகளின் அளவைப் பற்றிய சரியான புள்ளிவிவரங்களைப் பெறுவது மிகவும் கடினம்.[7] இதே போன்ற காரணங்களுக்காக, சட்ட அமலாக்க அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமிருந்து கையூட்டு பெற உந்தப் படுகிறார்கள், அல்லது ஆணவக் கொலை போன்ற கடுமையான விளைவுகளுக்கு பயப்படுவார்கள்.

பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பிற முறைகேடுகளை எதிர்த்து, தெலங்காணா காவல்துறை பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த SHE குழுக்களை நிறுவியுள்ளது.

வரதட்சணை மரணங்கள்

தொகு

வரதட்சணை மரணம் என்பது திருமணமான பெண்ணின் வரதட்சணை தொடர்பாக ஏற்பட்ட தகராறால் ஏற்பட்ட கொலை அல்லது தற்கொலை ஆகும்.[8] சில சமயங்களில், கணவனும், உறவினர்களும் தொடர்ச்சியான துன்புறுத்தலாலும், சித்திரவதையின் மூலமும் அதிக வரதட்சணையைப் பறிக்க முயற்சிப்பார்கள். இது சில சமயங்களில் மனைவியானவளின் தற்கொலையில் முடிகிறது.[9]

வரதட்சணை மரணம் குறித்து உத்தரபிரதேசத்தில், 2,244 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது நாடு முழுவதும் வரதட்சணை இறப்புகளில் 27.3% ஆகும்.[3] பீகாரில், 1,275 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது நாடு முழுவதும் 15.5% வழக்குகளைக் கொண்டுள்ளது. [3] வரதட்சணை இறப்பு சம்பவங்கள் 2011 முதல் 2012 வரை 4.5% குறைந்துள்ளது.[3][10]

2018 ஆம் ஆண்டில், ஒவ்வொரு ஆண்டும் 5,000 வரதட்சணை இறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன.

இதையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Table 5: Gender Inequality Index". hdr.undp.org. United Nations Development Programme. Archived from the original on 9 November 2017. பார்க்கப்பட்ட நாள் 9 December 2018.
  2. "Crimes Against Women" (PDF). Ncrb.gov.in. National Crime Records Bureau. 2013. Archived from the original (PDF) on 2013-09-18. பார்க்கப்பட்ட நாள் 2014-03-02.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "Crimes Against Women" (PDF). Ncrb.gov.in. National Crime Records Bureau. 2013. Archived from the original (PDF) on 2013-09-18. பார்க்கப்பட்ட நாள் 2014-03-02."Crimes Against Women" (PDF). Ncrb.gov.in. National Crime Records Bureau. 2013. Archived (PDF) from the original on 2013-09-18. Retrieved 2014-03-02.
  4. "India tackles domestic violence". BBC News. 2006-10-27. Retrieved 3 March 2014.
  5. Menon, Suvarna V.; Allen, Nicole E. (2018-04-25). "The Formal Systems Response to Violence Against Women in India: A Cultural Lens". American Journal of Community Psychology 62 (1–2): 51–61. doi:10.1002/ajcp.12249. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-0562. பப்மெட்:29693250. 
  6. 6.0 6.1 "International Men and Gender Equality Survey (IMAGES)". ICRW.org. Archived from the original on 2016-03-27. பார்க்கப்பட்ட நாள் 2016-04-05.
  7. Menon, Suvarna V.; Allen, Nicole E. (2018-09-01). "The Formal Systems Response to Violence Against Women in India: A Cultural Lens" (in en). American Journal of Community Psychology 62 (1–2): 51–61. doi:10.1002/ajcp.12249. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-2770. பப்மெட்:29693250. 
  8. "dowry death: definition of dowry death in Oxford dictionary (American English) (US)". Oxforddictionaries.com. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-04-05.
  9. Oldenburg, V. T. (2002). Dowry murder: The imperial origins of a cultural crime. Oxford University Press.
  10. "Chapter 5: Crimes Against Women, NCRB Crime in India 2014" (PDF).

52.Crimes against women in the 21st century,( 2021 ), international journal of multidisciplinary explorer.

வெளி இணைப்புகள்

தொகு