வன்முறை (பாத்திரப் படைப்பு விளையாட்டு)

வன்முறை (Violence: role-playing game) என்பது ஹாக்செட் நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாத்திரப்படைப்பு விளையாட்டு ஆகும்.[1]

வரலாறு

தொகு

வன்முறை ஹாக்செட் நிறுவனம் 1999 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு நவீன பாத்திரப்படைப்பு விளையாட்டு ஆகும். செனான் என்பவரின் கூற்றுப்படி நவீன கால பாத்திரப்படைப்பு விளையாட்டுகளிலேயே இந்த விளையாட்டு தான் மிகக்குறைந்த அளவிலான ரசிகர்களைக்கொண்டது ஆகும். இதில் நையாண்டி தொனியில் வன்முறையானது கையாளப்பட்டிருக்கும். இந்த விளையாட்டில் பாத்திரப்படைப்பானது  மக்களின் வீட்டில் நுழைந்து அவர்களைக் கொன்று அவர்களின் உடைமைகளை கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.[2]

விளையாடும் முறை

தொகு

இந்த  விளையாட்டானது வழக்கமான சமகாலத்தின் மாநகரங்களில், இந்த கதை மாந்தர்கள் வீடு புகுந்து அங்கு உள்ளவர்களை கொலை செய்து அவர்களின் உடமைகளை களவாடிச் செல்லும் வகையில் அதே சமயம் அதனை நையாண்டி தொனியில் வழங்கியிருப்பர். இதனை விளையாடுவதன் மூலம் பயனர்கள் அனுபவ புள்ளியினை வெளியீட்டு நிறுவனத்திடமிருந்தோ அல்லது அதனை வடிவமைத்தவர்களிடமிருந்தோ பெற இயலும். இதில் புது வகையான அமைப்பு முறையும் பல்வேறு வகையான உபகரணங்களும், ஆயுதங்களும் உள்ளன. ஆனாலும் இது பெரும்பாலான மக்களினால் புறக்கணிக்கப்பட்டது. ஏனெனில் அதன் விதிமுறைகள் சற்று பயன்படுத்த கடினமாக இருந்தது. மேலும் வழக்கமான நீள்வசவுரைக்கு (rant) எதிராகவும் அமைந்தது.

இதன் முகப்பு அமைப்பினை கிளின்ட் லாங்லி என்ற கலைஞர்  உருவாக்கினார். எசுப்பானியம் மொழியிலும் இதன் பதிப்பு உள்ளது.

சான்றுகள்

தொகு
  1. Role-Playing Game Encyclopedia states 1999 for the first release of Violence
  2. Shannon Appelcline (2011). Designers & Dragons. Mongoose Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907702-58-7.

வெளிஇணைப்புகள்

தொகு