வரக்கல் தேவி கோயில்
வரக்கல் தேவி கோயில் (Varakkal Devi Temple) என்பது கேரளத்தின், கோழிக்கோட்டில் மிகவும் புகழ் பெற்ற தேவி கோவில்களில் ஒன்றாகும். கோயிலின் முதன்மை தெய்வம் துர்கை (பகவதி). இந்த கோயிலில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் ஆகிய தெய்வங்கள் துணை தெய்வங்களாக உள்ளனர்.
அமைவிடம்
தொகுஇக்கோயிலானது வெஸ்ட் ஹில்ஸ் தொடருந்து நிலையத்திற்கு அருகில் கோழிக்கோடு வெஸ்ட் ஹில் அருகே ஒரு மலையுச்சியில் அமைந்துள்ளது.
திருவிழா மற்றும் சடங்குகள்
தொகுஇந்தக் கோயிலின் முக்கிய திருவிழா வாவுபலி ஆகும். இறந்த முன்னோர்களுக்கு ஈமக்கடன் செய்வதற்காக வர்க்கல் கடற்கரையில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள். நவராத்திரி: கோவிலில் நவராத்திரி விழாவும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. மஹானிவேதம் கோயிலின் மிக முக்கியமான சடங்கு, புஷ்பஞ்சலி, படிவிளக்கு, நெய்விளக்கு, திரிகல்பூசை, சுயம்வர புஷ்பாஞ்சலி, சாந்தான கோபால பூஜை, கணபதி ஹோமம், தில ஹோமம் ஆகியவை மற்ற வழிபாடுகளாகும்.
மேலாண்மை
தொகுஇந்த கோவிலை கோழிகோட்டின் சாமுத்திரி நிர்வகிக்கிறார்.