வராக அவதாரம்
வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் காட்டுப்பன்றி (வராகம்) அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியகசிப்புவின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனுடன், வராக அவதாரத்தில், விஷ்ணு, ஆயிரம் ஆண்டுகள் போர் செய்து இரண்யாட்சனை கொன்றார் மற்றும் அவர் பூமியை துக்கி சூரிய குடும்பத்தில் வைத்தார்.[1] சடபாத பிராமணம், தைத்தர்ய ஆரண்யகம் மற்றும் இராமாயணம் போன்ற இலக்கியங்களில் இந்த அவதாரத்தினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.[1] வராகப் படிமம் என்பதை ஆதிவராகம், யக்ஞவராகம், பிரளய வராகம் என்று மூன்றாகப் பிரித்துள்ளனர். இந்தப் பிரிவு, அதன் வடிவத்திற்கேற்ற படி பிரிக்கப்பட்டுள்ளது. [1] விஷ்ணு கட்டுப்பன்றி உருவில் ஏழு உலக மண்ணையும் இடறிப் பார்த்தது மட்டுமில்லாமால், அவர் சிவனின் அடிகளையும் துக்கி சென்றார்.[2]
கோயில்களில்
தொகுஏரான் எனும் இடத்தில் குப்தர்கள் காலத்து வராகப் படிமம் உள்ளது. இதுவே தற்போது இருக்கும் படிமங்களில் தொன்மையானது.[1] மாமல்லபுரத்தில் ஆதிவராக வடிவம் குடவரையாக செதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருப்பது பொ.ஊ. 7 மற்றும் பொ.ஊ. 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.[1]
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், திருப்பரங்குன்றம் ஆகியவற்றில் குடவரையாக வரகார் சிலைகள் உள்ளது. இவை பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாகும்.[1]