வருசநாடு
வருசநாடு (Varusanadu) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து (குறியீடு: 232202 [1] ). இது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமம் கடமலைகுண்டு - மயிலாடும்பாறை பஞ்சாயத்து ஒன்றியம் மற்றும் ஆண்டிபட்டி வட்டத்தின் கீழ் வருகிறது.
இந்த பகுதியைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கு வருசநாடு பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியாகும். இது மேகமலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெரியார் பீடபூமியின் கீழ் வரும் இந்த பள்ளத்தாக்கிலிருந்து வைகை ஆறு உருவாகிறது.
வரலாறுதொகு
முந்தைய காலங்களில் (இந்தியச் சுதந்திரத்திற்கு முந்தைய வழி), இந்த பள்ளத்தாக்கு முழுமையும் மரங்கள் நிறைந்து காணப்பட்டது. தமிழ் பழமொழியான "வருசநாட்டுக்கு போனா, வச்சா எடத்த சொலிட்டு போ" என்ற பழமொழியின் பொருளானது வருசநாட்டுக்குச் செல்வதற்கு முன், உங்கள் சொத்துக்கள் மற்றும் உடைமைகளைப் பற்றி யாருக்காவது தெரியப்படுத்துங்கள் என்பதாகும். ஏனெனில் இந்த ஆபத்து நிறைந்த பள்ளத்தாக்குக்குச் சென்றபின் யாரும் உயிருடன் திரும்பி வரமாட்டார்கள் என்பதாகும். இந்த பகுதி சுதந்திரத்திற்கு முன்பு கண்டமனூர் ஜமீன்தாரின் கீழ் இருந்தது.
வேளாண்மைதொகு
இலவம் பஞ்சு, முந்திரி, கரும்பு, தேங்காய், நெல், நிலக்கடலை ஆகியவை இந்த பகுதியில் முக்கியமாக உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களாகும். இப்பகுதியினைச் சார்ந்த 'வருசநாட்டுத் தேங்காய்' என்பது தமிழ்நாட்டின் தேங்காய் சந்தைகளில் அறியப்பட்ட தேங்காய் வகைகளுள் ஒன்றாகும்.
அரசியல்தொகு
வருசைநாடு ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. ஆண்டிபட்டி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு எம். ஜி. ஆர், ஜெ. ஜெயலலிதா, எஸ். எஸ். இராசேந்திரன் போன்ற பிரபலமானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் தேனி மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.
பிற தகவல்தொகு
- SH-101 ( தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலைகள்) - வருசநாடு மற்றும் வைகை அணைக்கு இடையில் உள்ளது [2]
- இந்த பகுதியில் உள்ள தேவாலயங்கள் மதுரை மறைமாவட்டத்தின் கடமலைக்குண்டின் வேளாங்கண்ணி தேவாலயத்தின் கீழ் வருகின்றன. [3]
- பஞ்சந்தாங்கி மலைகள் (வறட்சியில் தப்பிக்கும் மலை), வெள்ளி மலை இந்த பகுதி/பள்ளத்தாக்கில் அறியப்பட்ட மற்ற மலைகள்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Village Panchayat Names of KADAMALAIKUNDRU MYLADUMPARAI,THENI,TAMIL NADU". 2013-02-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "State Highways in Madurai District of Tamilnadu" (PDF). 2012-03-11 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2020-12-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Velankanni Mission Church, Kadamalaikundu of Archdiocese of Madurai". 2013-02-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-12-30 அன்று பார்க்கப்பட்டது.