வருடாந்திர உயிரிக்கட்டுப்பாடு தொழிற் கூட்டம்
வருடாந்திர உயிரிக்கட்டுப்பாடு தொழிற் கூட்டம் (Annual Biocontrol Industry Meeting) என்பது உலகம் முழுவதும் உள்ள உயிரியல் தாவர பாதுகாப்பு தயாரிப்புகளின் உற்பத்தியாளர்கள் கூடும் வருடாந்திர மாநாடு ஆகும். 2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோ ஆண்டும் 300 - 400 நிறுவனங்களில் இருந்து 700 - 800 பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். [1] [2] [3]
மாநாட்டின் குறிக்கோள், இயற்கையான (உயிரியல்) முறைகள் மூலம் தாவரப் பயிர்களில் தாவரங்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், குறிப்பாக உயிரி விளைவுகள் பற்றிய வணிக மற்றும் அறிவியல் அனுபவங்களை பரிமாறிக்கொள்வது மற்றும் வணிக அறிவியல் முன்னேற்றங்களை வழங்குவதாகும்.
இந்த சந்திப்பு ஒவ்வோர் இலையுதிர் காலத்திலும் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பேசெல் நகரத்தில் நடைபெறுகிறது. மேலும் உயிரியல் வேளாண்மைக்கான சுவிட்சர்லாந்து ஆராய்ச்சி நிறுவனம் இதை ஏற்பாடு செய்து நடத்துகிறது. இதற்கு இணையாக, உயிரியல் தாவரப் பாதுகாப்புத் தொழிலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கமான பன்னாட்டு உயிரி கட்டுப்பாடு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டமும் நடைபெறுகிறது.
செருமனியின் வேதிப்பொருள் உற்பத்தி செய்யும் பி.ஏ.எசு.எப் எனப்படும் பன்னாட்டு நிறுவனம், பேயர் எனப்படும் மருந்து உற்பத்தி நிறுவனம், உயிரியல் பயிர் பாதுகாப்பு நிறுவனம், [4] உயிர்பாதுகாப்பு நிறுவனம் [5] டி சங்கோசே, [6] கோப்பெர்ட்டு, [7] மன்சாண்டோ பயோ ஏ.ஜி [8] ஓரோ அக்ரி, [9] சுமிட்டோமா, சிங்கெண்டா, வேலண்டு பயோசயன்சசு நிறுவனங்கள்[10] இக்கூட்டத்தின் முக்கிய ஆதரவாளர்கள் ஆவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Webpage of FIBL concerning ABIM 2015". Archived from the original on 2016-07-27. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
- ↑ ABIM on Eventegg
- ↑ ABIM on youtube
- ↑ Webpage Biobest,
- ↑ "Webpage Biogard". Archived from the original on 2020-05-14. பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.
- ↑ Webpage De Sangosse
- ↑ Webpage Koppert
- ↑ Webpage Monsanto Bio AG
- ↑ Webpage Ori Agri
- ↑ Webpage Valentbiosciences
புற இணைப்புகள்
தொகு- வலைப்பக்கம் ABIM Basel பரணிடப்பட்டது 2021-05-05 at the வந்தவழி இயந்திரம்
- வலைப்பக்கம் FIBL சுவிட்சர்லாந்து
- இணையப்பக்கம் IBMA - சர்வதேச உயிரி கட்டுப்பாடு உற்பத்தியாளர்கள் சங்கம்
- ஏஜி பயோவேர்ல்ட்
- விவசாயத்தில் பயோ இசுடிமுலண்ட்சு சங்கம் பரணிடப்பட்டது 2020-02-02 at the வந்தவழி இயந்திரம்
- EU திட்ட பயோஃபெக்டர்
- பயோஃபெக்டர் தரவுத்தளம் பரணிடப்பட்டது 2018-10-30 at the வந்தவழி இயந்திரம்