வலகம்பாகு
வலகம்பாகு அல்லது வட்டகாமினி அபயன் [1] என்பவன் இலங்கையின் அனுராதபுர அரசனாவான். அரசனாகி ஐந்து மாதங்களுக்குப் பின், தென்னிந்தியாவில் இருந்து வந்த ஒரு கிளர்ச்சிப் படை மூலம் இவனை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் பதினான்கு ஆண்டுகள் கழித்து படையெடுப்பாளர்களை தோற்கடித்து மீண்டும் அரியணை ஏறினான்.
வலகம்பாகு | |||||
---|---|---|---|---|---|
இலங்கை மன்னன் | |||||
ஆட்சி | கி.மு. 103, கி.மு. 89 – கி.மு. 77 | ||||
முன்னிருந்தவர் | தாதிக | ||||
மகசுழி மகாதிஸ்ஸ | |||||
அரசி | அனுலா தேவி சோமாதேவி | ||||
| |||||
இறப்பு | கி.மு. 77 |
துட்ட காமினியின் சகோதரனான சத்தா திச்சனின் நான்காம் மகன் ஆவான். இவனுடைய மூத்த சகோதரர்களான துலத்தன், லஞ்ச திச்சன், கல்லாட நாகன் என்போர் இவனுக்கு முன்பே ஆட்சிபுரிந்தனர்.[2] இவன் கல்லாட நாகனின் மகனான மகசுழிகா என்பவனை தனது மகனாக ஏற்றுக்கொண்டான். மகசுழிகாவின் தாயான அனுலாதேவியை ராணியாக ஏற்றுக்கொண்டான். இவனுக்கு சோமாதேவி எனும் இன்னொரு மனைவியும் இருந்தாள்.
சேவைகள்
தொகுஇவனே அபயகிரி விகாரையைக் கட்டுவித்தான். இதன் உயரம் 70 மீற்றர்கள் ஆகும்.[3] இவ்வபயகிரி விகாரை பின்னாளில் நாட்டின் பிரதான மூன்று பௌத்த அமைப்புக்களுள் ஒன்றாக விளங்கியது. இதைவிடவும் மேலும் சில தாதுகோபங்களையும் இவன் கட்டியுள்ளான். இதைப்பற்றிய குறிப்புகள் திரிபிடகத்தில் இவ்வரசனின் ஆட்சிக்காலத்தில் பதியப்பட்டுள்ளன.[4]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Obeyesekere, Gananath. The Cult of the Goddess Pattini. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-61602-9.
- ↑ Geiger, Wilhelm. "Mahavamsa - The Ten Kings". Archived from the original on 2010-04-22. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.
- ↑ "Anuradhapura". Sacred Destinations. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.
- ↑ Ellawala, H. (1969). Social Hostory of Early Ceylon. Department of Cultural Affairs.