பிளமிங்கின் இடக்கை வலக்கை விதிகள்

(வலக்கை விதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிளமிங்கின் இடக்கை விதி (Fleming's Left-Hand rule) என்பது மின் எந்திரங்களில் (மின்னை வழங்கி இயக்கம் ஏற்படுத்தப்படும்) போதும் பிளமிங்கின் வலக்கை விதி (Fleming's right-Hand rule) என்பது மின்பிறப்பாக்கிகளில் (தூண்டல் மின் பிறப்பாக்கத்தின்) போதும் காந்த விசை அல்லது காந்தப் பாயம், மின்னோட்டம், இயக்கம் இவைகளின் திசைகள் பற்றி நினைவிகளாகக் கொள்ளப்படும் விதிகள் ஆகும். இவ்விரு விதிகளையும் யோன் அம்புரோசு பிளமிங் 19 ஆம் நூற்றாண்டில் கண்டறிந்தார்.

Thrust(விசை)/Motion(கடத்தியின் இயக்கம், Field(காந்தப்புலம்), Current(மின்னோட்டம்)

பிளமிங்கின் இடக்கை விதி

தொகு

இடக்கையின் ஆள்காட்டி விரல், நடு விரல், பெரு விரல் ஆகியவை ஒன்றிற்கு ஒன்று செங்குத்தாக இருக்குமாறு அமைத்துக் கொண்டு, நடுவிரலின் திசையில் மின் இயக்க விசையும் (EMF) ஆள்காட்டி விரலின் திசையில் காந்த பாயமும் (FLUX) இருப்பதாகக் கொண்டால் பெருவிரலின் திசையில் மின் எந்திரத்தில் இயக்கம் இருக்கும்.[1]

இன்னொரு கூற்று இடது கையின் பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று நேர்க்குத்தான திசைகளில் வைத்துக் கொள்க. சுட்டுவிரல் காந்தப்புலத்தின் (B) திசையையும், நடுவிரல் மின்னோட்டத்தின் (I) திசையையும் குறித்தால், பெருவிரல் கடத்தி இயங்கும் திசையினைக் (F) குறிக்கும்[2]..
 
thumb

பிளமிங்கின் வலக்கை விதி

தொகு

இது மின்னியற்றி விதி என்றும் அழைக்கப்படும். மின் பிறப்பாக்கிகளில் தூண்டல் மின்னாக்கத்தின் போது பிரயோகிக்கக் கூடியது. இங்கும் வலக்கையின் ஆள்காட்டி விரல், நடு விரல், பெரு விரல் ஆகியவை ஒன்றிற்கு ஒன்று செங்குத்தாக இருக்குமாறு அமைத்துக் கொண்டு, ஆள்காட்டி விரலின் திசையில் காந்த பாயமும் (FLUX) பெருவிரலின் திசையில் கடத்தியின் இயக்கமும் இருப்பதாகக் கொண்டால் நடுவிரலின் திசையில் மின்பிறப்பாக்கியினால் பிறப்பாக்கப்படும் மின் இயக்க விசை இருக்கும்.

இன்னொரு கூற்று வலது கையின் ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் பெருவிரல் ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக வைத்துக் கொண்டு, ஆள்காட்டி விரல் காந்தப்புலத்தின் திசையையும், பெருவிரல் கடத்தி இயங்கும் திசையையும் குறிப்பதாகக் கொண்டால் நடுவிரலானது தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையைக் குறிக்கும்[3].

மேற்கோள்கள்

தொகு
  1. Fleming, John Ambrose (1902). Magnets and Electric Currents, 2nd Edition. London: E.& F. N. Spon. pp. 173–174.
  2. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்-வகுப்பு 12-இயற்பியல்-அலகு 3
  3. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்-வகுப்பு 12-இயற்பியல்-அலகு 4