வலன்டைன் டானியல்

பேராசிரியர் எரோல் வலன்டைன் டானியல் (Errol Valentine Daniel) இலங்கைத் தமிழ் கல்விமானும், மானிடவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். தற்போது இவர் மானிடவியல் பேராசிரியராகவும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.[1][2]

வலன்டைன் டானியல்
Valentine Daniel
இனம்இலங்கைத் தமிழர்
படித்த கல்வி நிறுவனங்கள்அமெர்ஸ்ட் கல்லூரி,
சிக்காகோ பல்கலைக்கழகம்
பணிகல்விமான்

ஆரம்ப வாழ்க்கை தொகு

வலன்டைன் டானியல் இலங்கையின் மலையகத்தில் நாவலப்பிட்டி நகரில் பிறந்தவர். கம்பளை புனித அன்ட்றூஸ் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[3][4] பின்னர் மாசச்சூசெட்ஸ் ஆமெர்ஸ்டுக் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.[5] பின்னர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார்.[5]

பணி தொகு

வலன்டைன் டானியல் 1978 முதல்-1990 வரை வாசிங்டன் பல்கலைக்கழகத்திலும்[6] பின்னர் மிச்சிகன் பல்கலைகழகத்திலும் (1990-97) விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1995 முதல் 1997 வரை சமூக உருமாற்றத்துக்கான ஒப்பீட்டு ஆய்வு நிலையத்தின் பணிப்பாளராகப் பணியாற்றினார்.[5] பின்னர் நியூயோர்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இணைந்தார். அத்துடன் ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்), ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.[5]

டானியல் 1995 ஆம் ஆண்டுக்கான கூகனைம் ஆய்வுதவி பெற்றவர்களில் ஒருவராவர்.[5] இவர் தமிழ், சிங்களம், பிரெஞ்சு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்றுள்ளார்.[5][7]

நூல்கள் தொகு

வலன்டைன் டானியல் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்:[1]

  • Karma: An Anthropological Inquiry (1983, University of California Press. சார்ல்சு கேயெசுடன் இணைந்து)[8]
  • Fluid Signs: Being a Person the Tamil Way (1984, University of California Press)[9]
  • The Semeiosis of Suicide in Sri Lanka (1989, in Semiotics, Self, and Society by Benjamin Lee and Greg Urban, Mouton de Gruyter)
  • Plantations, Proletarians, and Peasants in Colonial Asia (1992, Frank Cass & Co, இணைந்து எழுதியோர்: Henry Bernstein, Tom Brass)
  • Culture/Contexture: Essays in Anthropology and Literary Study (1996, University of California Press, இணைந்து எழுதியவர்: Jeffrey M. Peck)[10]
  • Mistrusting Refugees (1996, University of California Press, இணைந்து எழுதியவர்: John Knudsen)[11]
  • Charred Lullabies: Chapters in an Anthropography of Violence (1997, Princeton University Press)[12]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "E Valentine Daniel". கொலம்பியா பல்கலைக்கழகம். Archived from the original on 2015-08-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-25.
  2. Daniel, E. Valentine (17 அக்டோபர் 1999). "But Neelan Tiruchelvam, I trusted". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/991017/plus9.html. 
  3. "Jaffna College celebrates two centennials". சண்டே ஒப்சர்வர். 14 நவம்பர் 2004 இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924120835/http://www.sundayobserver.lk/2004/11/14/new25.html. 
  4. Kanagsabapathipillai, Dushiyanthini (10 ஆகத்து 2013). "Jaffna College: Celebrating Excellence". சிலோன் டுடே (02/225): p. 5 இம் மூலத்தில் இருந்து 2015-08-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150817023127/http://ceylontoday.lk/e-paper.html. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 "About the Authors". Macalester College.
  6. Keyes, Charles F.; Daniel, E. Valentine, தொகுப்பாசிரியர்கள் (1983). Karma: An Anthropological Inquiry. கலிபோர்னியா பல்கலைக்கழக பிரசு. பக். ix. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-04429-0. https://books.google.com/books?id=49GVZGD8d4oC. 
  7. "E. Valentine Daniel". John Simon Guggenheim Memorial Foundation.
  8. "Karma, an Anthropologoical Inquiry". University of California Press. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-25.
  9. "Fluid Signs: Being a Person the Tamil Way". University of California Press.
  10. "Culture/Contexture: Explorations in Anthropology and Literary Studies". University of California Press. Archived from the original on 2019-07-17. பார்க்கப்பட்ட நாள் 2015-09-25.
  11. "Mistrusting Refugees". University of California Press.
  12. "Charred Lullabies: Chapters in an Anthropography of Violence". Princeton University Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலன்டைன்_டானியல்&oldid=3570957" இலிருந்து மீள்விக்கப்பட்டது