வலைத் தேடல் பொறி


வலைத் தேடல் பொறி (Web search engine) எனபது வோல்டு வைடு வெப்பில் தகவல்களை தேடுவதற்காக வடிவமைக்கப்பட்டதொரு சாதனம். ஹிட்ஸ் என்று பொதுவாக அழைக்கப்படும் பட்டியல் ஒன்றில் இந்த தேடுதல் முடிவுகள் வழங்கப்படும். இந்தத் தகவல்களில் இணைய பக்கங்கள், படங்கள், தகவல்கள் மற்றும் பிற ஃபைல் வகைகள் இடம் பெற்றிருக்கும்.சில சர்ச் என்ஞின்கள் செய்தி புத்தகங்கள், டேட்டாபேஸ்கள், அல்லது ஓப்பன் டைரக்டரிகள் போன்றவைகளில் கிடைக்கப்பெறும் தகவல்களையும்தேடித்தரும் மனித சக்தியால் பராமரிக்கப்படும் வெப் டைரக்டரிகள், போல் இல்லாமல், சர்ச் என்ஞின்கள் அல்காரிதம் முறையிலோ அல்லது அல்காரிதம் மற்றும் மனித உள்ளீடு ஆகிய இரண்டின் கலவையிலோ செயல்படும்.

வரலாறு

தொகு
காலக் கோடு(முழு பட்டியல்)
வருடம் என்ஜின் ஈவென்ட்
1993 ஆலைவெப்(aliweb) அறிமுகப்படுதப்பட்டது
ஜம்ப் ஸ்டேஷன்(jumpstation) அறிமுகப்படுதப்பட்டது
1994 வெப்கிராலேர் (webcrawler) அறிமுகப்படுதப்பட்டது
இன்போசீக் (infoseek) அறிமுகப்படுதப்பட்டது
லைகொஸ்(lycos) அறிமுகப்படுதப்பட்டது
1995 ஆல்டாவிஸ்டா(altavista) அறிமுகப்படுதப்பட்டது
ஓபன் டெக்ஸ்ட் வெப் இன்டெக்ஸ் (open text web index) அறிமுகப்படுதப்பட்டது

http://www.highbeam.com/doc/1G1-16636341.html

மாகெல்லன்(magellan) அறிமுகப்படுதப்பட்டது
எக்சைட்(excite) அறிமுகப்படுதப்பட்டது
SAPO அறிமுகப்படுதப்பட்டது
1996 டாக்பயில்(dogpile) அறிமுகப்படுதப்பட்டது
இங்க்டொமி(inktomi) கண்டுபிடிக்கப்பட்டது
ஹாட்பாட்(hotbot) கண்டுபிடிக்கப்பட்டது
ஆஸ்க் ஜீவ்ஸ்(askjeeves) கண்டுபிடிக்கப்பட்டது
1997 நாதேர்ன் லைட்ஸ்(nothernlights) அறிமுகப்படுதப்பட்டது
யாண்டேக்ஸ்(yandex) அறிமுகப்படுதப்பட்டது
1998 கூகில் அறிமுகப்படுதப்பட்டது
1999 ஆல்திவெப்(alltheweb) அறிமுகப்படுதப்பட்டது
ஜீனீநோஸ்(genieknows) கண்டுபிடிக்கப்பட்டது
நேவர்(naver) அறிமுகப்படுதப்பட்டது
டியோமா(teoma) கண்டுபிடிக்கப்பட்டது
விவிசிமோ(vivisimo) கண்டுபிடிக்கப்பட்டது
2000 பைடு(baidu) கண்டுபிடிக்கப்பட்டது
2003 இன்போ.காம்(info.com) கண்டுபிடிக்கப்பட்டது
2004 யாஹூ! சர்ச்(yahoo!search) இறுதி முறையாக அறிமுகப்படுதப்பட்டது
A9.காம்(a9.com) அறிமுகப்படுதப்பட்டது
சோகூ(sogou) அறிமுகப்படுதப்பட்டது
2005 MSN சர்ச் இறுதி முறையாக அறிமுகப்படுதப்பட்டது
ஆஸ்க்.காம்(ask.com) அறிமுகப்படுதப்பட்டது
குட்சர்ச்goodsearch) அறிமுகப்படுதப்பட்டது
2006 விக்கிசீக்(wikisearch) கண்டுபிடிக்கப்பட்டது
குவஎரோ(quaero) கண்டுபிடிக்கப்பட்டது
ஆஸ்க்.காம்(ask.com) அறிமுகபடுத்தப்பட்டது
லைவ் சர்ச்(live search) அறிமுகபடுத்தப்பட்டது
சாசா(chacha) பீட்டா முறையில் அறிமுகப்படுதப்பட்டது
குருஜி.காம்(guruji.com) பீட்டா முறையில் அறிமுகப்படுதப்பட்டது
2007 விக்கிசீக்(wikiseek) அறிமுகப்படுதப்பட்டது
விகியா சர்ச்(wikia search) அறிமுகப்படுதப்பட்டது
ப்ளாக்கில்.காம்(blackle.com) அறிமுகப்படுதப்பட்டது
2008 பவர்செட்(powerset) அறிமுகப்படுதப்பட்டது
வியூஸி(viewzi) அறிமுகப்படுதப்பட்டது
கூல் (Cuil) அறிமுகப்படுதப்பட்டது
பூகமி(boogami) அறிமுகப்படுதப்பட்டது
லீப்பிஷ்(leapfish) பீட்டா முறையில் அறிமுகப்படுதப்பட்டது
VADLO அறிமுகப்படுதப்பட்டது

இந்த வெப் சர்ச் என்ஜின்களுக்கு முன்னர் வெப் செர்வர்களின் முழுபட்டியல் இருந்தது.இது டிம் பேர்னேர்ஸ்-லீயால் பதிப்பிக்கப்பட்டு ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் வெப்சர்வர் மூலம் ஹோஸ்ட் செய்யப்பட்டது. அனால் ஒரே ஒரு பழைய பட்டியல் மட்டும் இன்று வரை இருக்கிறது.[1] நாளடைவில் வெப் செர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த முக்கிய நடுநாயகமான பட்டியலும் விரிவடைந்துக் கொண்டே போனது.NCSA இணைய தள பக்கத்தில் புதிதாக வெளிவரும் செர்வர்களின் பெயர்கள் "என்ன புதிது?" என்ற தலைப்பின் கீழ் வெளிவந்தன.அனால் ஒரு முழுமையான் பட்டியல் எந்த தல பக்கத்திலும் வெளிவரவில்லை.[2]

இணையதளத்திள் (ப்ரீ-வெப்) தேடுதல் பணிக்காக பயன்படுத்தப்பட்ட முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட சாதனம் ஆர்ச்சி ஆகும்.[3] [3] இது மான்ட்ரியல் - ல் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த ஆலன் எம்டேஜ், அவர்களால் 1990 - ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தகவல் பட்டியல் கொண்ட கோப்பை, மறைத்துவைக்கப்பட்டுள்ள பொது FTP (File Transfer Protocol) களுக்குள் டவுன்லோட் செய்வதன் மூலம் தேடுதல் பணிக்கு சுலபமான கோப்பை பெயர்களைக்கொண்ட டேடாபேசை உண்டாக்க முடிகிறது. ஆயினும் ஆர்ச்சி இந்த இணையதளப் பக்கத்தின் பொருளடக்கத்திற்கு அட்டவணையைக் கொள்ளவில்லை.

கோஃபரின் (1991 _ ம் ஆண்டு மினிசோடா பல்கலைகழைகத்தில் மார்க் டமக்கஹில் அவர்களால் உருவாக்கப்பட்டது) துவக்கம் வெரோனிக்கா மற்றும் ஜக்ஹெட்(கணினி)ஜக்ஹெட்{/4 அகிய இரண்டு புதிய சர்ச் புரோக்கிராம்கள், உருவாக வழி வகுத்தது. ஆர்ச்சியைப்போலவே இவையும் கோப்பை பெயர்களையும் தலைப்புகளையும் கோபர் அட்டவணை அமைப்புகளில் தேட முனைப்பட்டன(Gopher index systems).வெரோனிகா (Veronica (V ery E asy R odent-O riented N et-wide I ndex to C omputerized A rchives)), எல்லா கோபர் பட்டியல்களிலும் கோபர் தலைப்புகளை தேட முக்கிய வார்த்தைகளை (key words) உருவாக்கித் தந்தது.ஜக்ஹெட் (Jughead (J onzy's U niversal G opher H ierarchy E xcavation A nd D isplay)), குறிப்பிட்ட கோபர் சர்வர்களிலிருந்து பட்டியல் சம்மந்தப்பட்ட தகல்வல்களை பெறுவதற்கான ஒரு கருவியாக அமைந்தது.இந்த "Archie" சர்ச் எஞ்சினுக்கும் ஆர்ச்சி காமிக் புத்தகத்துக்கும் சம்மந்தம் இல்லாவிட்டலும் ஆர்ச்சியையடுத்து வெளிவந்த வெரோனிகா மற்றும் ஜக்ஹெட் அந்த காமிக் புக்கில் வந்த கதாப்பாத்திரங்களின் பெயரைக் கொண்டுதான் அழைக்கப்பட்டன.

ஜூன் மாதம், 1993 ல், மாத்தியூ கிரே என்பவர் (அப்போது MITஇல் பணிபுரிந்தார்), Perlலை தழுவிய வேர்ல்ட் வைட் வெப் வாண்டரேரை தயாரித்தார். இது இது வாண்டேக்ஸ் (wandex) என்று அழைக்கப்பட்ட அட்டவணையை உருவாக்க, தயாரிக்கப்பட்ட முதல் வெப் ரோபோட் ஆகும்.வேர்ல்ட் வைட் வெப்பின் அளவை மத்திபிடுவதே இந்த வாண்டரேரின் குறிக்கோளாக 1995 ஆம் ஆண்டு வரை இருந்தது. அலைவெப் என்ற சர்ச் என்ஜின் 1993 ல் நவம்பர் மாதம், தோற்றுவிக்கப்பட்டது. அலைவெப் வெப் ரோபோட்டைஉபயோகிக்கவில்லை என்றாலும், தேடுதலை, ஒரு தனிப்பட்ட வடிவம்மைப்பைக் கொண்ட அட்டவணை கோப்பை மூலம் ஒவ்வரு இணையதள பக்கத்திலும் செய்தது.இந்த செயல் வெப் சயிட் நிர்வாகிகளினால் (website administrators) நடைபெற்றது.

இணையதள பக்கங்களை கண்டுபிடிக்கவும் அதனின் அட்டவணையை உண்டாக்கவும் 1993, டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட ஜம்ப்ஸ்டேஷன்[4])ஒரு வெப் ரோபோட்டை உபயோகப்படுத்தியது .அது மேலும், கேள்விக்களுக்கான பிரோக்ராமுகளுக்கான இண்டேர்பேசாக ஒரு வெப் பார்மையும்உபயோகப்படுத்தியது இந்த வெப் சர்ச் என்ஜினே, முதல் WWW மூல வளம்-கண்டுபிடிப்பு கருவியாக திகழ்ந்தது.இது ஊர்ந்து செல்லுதல், அட்டவணையிடுதல் மற்றும் தேடுதல் போன்ற மூன்று முக்கிய அம்சங்களைக்கொண்டு தனது செயல் திறனைக் காட்டியது. அது செயல் பட்ட தளம் மிகவும் குறைவான மூலதலத்தைக் கொண்டிருந்ததால், அதனால் அட்டவணையிடுதலையும் தேடுதலையும் சரிவர செய்ய இயலவில்லை. இதனால் இணையதள பக்கத்தில், ஊர்ந்து செல்லுதன் மூலம் (கிராலர்) உணர்ந்த தலைப்புகளை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது.

"முழுமையாக எழுத்துகளையும்" கிராலர்-அமைப்பு படி தேடி கண்டுபிடிக்க தலையாயப்பட்டவையில் ஒன்று வெப்கிராலர், இந்த சர்ச் என்ஜின் 1994 ஆம் வருடம் வெளிவந்தது. இது தனது முந்தாதையரைப் போல் அல்லாது எந்த இணையதள பக்கத்தில் இருக்கும் எந்த வார்த்தையையும் கண்டுபிடிக்க வல்லாண்மையைக் கொண்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் இன்று வெளி வரும் முக்கியமான சர்ச் என்ஜின்களும் செயல்படுகின்றன.இந்த இணையதளம் தான் முதல் முதலில் பொதுமக்கள் மத்தியில் பிரபலமானது. 1994 ல் லைகோஸ் என்ற சர்ச் என்கின் கார்நேஜீ மெல்லன் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு மாபெரும் வெற்றியானது.

இதற்கு பின்னர் ஏராளமான சர்ச் எஞ்சின்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை ஒன்றுடன் ஒன்று முதல் இடத்திற்காக போட்டியும் போட்டுக்கொண்டன.அவற்றுள் சில, மகெல்லன், எக்ஸைட், இன்போசீக், இங்க்டோமி, நாதேர்ன் லாயிட்ஸ், மற்றும் ஆல்டாவிஸ்டா. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலாமகத் திகழ்ந்தது யாஹூ!. இந்த யாஹூ மக்களுக்கு தேவையான நிறைய தகவல்களைத் தந்தாலும் அது தன்னுள் இருக்கிற வெப் டயிரேக்டரியைகொண்டு தேடுதல் வேட்டையை செய்தது. இதனால் இணையதளத்தில் உள்ள அத்தனை பக்கங்களிலும் இருக்கிற அத்தனை வார்த்தைகளையும் தேட தேவை இல்லாமல் போனது.தகவல் தேடுபவர்கள் முக்கிய வார்த்தையைக் கொண்டு தேடாமல் இதன் டயிறேக்டரியிலே தேட இது வழி வகுத்திருந்தது.

1996 ல்,நெட்ஸ்கேப் தனது பிரத்தியேகமான சர்ச் என்ஜினை அறிமுகப்படுத்த நினைத்தது இதற்கு பெரும் மவுசு ஏற்பட்டதால், நெட்ஸ்கேப்புடன் சேர்ந்து செயல் பட முக்கிய ஐந்து சர்ச் என்ஜின்கள் தயாராயின. சுழல் சக்கர அமைப்பின் படி இந்த ஐந்து சர்ச் என்ஜின்களும் ஒருவருடம் நெட்ஸ்கேப் பக்கத்தில் செயல்படும் என்றும், இதற்காக வருடம் ஒன்றுக்கு ஒவ்வொரு சர்ச் எஞ்சினுக்கும் தனித்தனியே ஐந்து மில்லியன் டாலர்கள் தரப்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.அந்த ஐந்து சர்ச் என்ஜின்களும், யாஹூ!, மகெல்லன், லைகோஸ், இன்போசீக்,எக்ஸைட் ஆகியவையாகும்.[மேற்கோள் தேவை]

இணையதளத்தில் முதலீடு செய்வதற்கு சர்ச் என்ஜின்கள் பெரும் ஈர்ப்பாக 1990 பின் வந்த நாட்களில் இருந்தன.[5] பல நிறுவனங்களும் மார்க்கெட்டில் நுழையும் போதே பெரிய அளவில் தான் நுழைந்தன. அவற்றின் இனிசியல் பப்ளிக் ஆபெரிங் பெரிய அளவில் இருந்தது. சில நிறுவனகள் தங்கள் பொது சர்ச் என்ஜின்களை நிறுத்திவிட்டு தொழில்கள் சம்மந்தப்பட்ட சர்ச் என்ஜின்களை மட்டும் வாணிபம் செய்கின்றன.(எடுத்துக்காட்டு:நாதேர்ன் லாயிட்ஸ்)Many search engine companies were caught up in the dot-com bubble, a speculation-driven market boom that peaked in 1999 and ended in 2001.

2000 ஆம் ஆண்டில் கூகிள் சர்ச் என்ஜின் மிக முக்கிய என்ஜினாக உருவம் பெற்றது.[மேற்கோள் தேவை]பேஜ்ரேங்க் என்ற கண்டுபிடிப்பின் மூலம் இது தேடுதல் வேட்டைகளுக்கு நிறைவான முடிவுகளைத் தந்தன. இந்தஐடரேடிவ் அல்காரிதம் இணையதளப் பக்கங்களின் எங்கள் மற்றும் மற்ற இணையதள பக்கங்களின் பேஜ்ரேங்க் முறைப்படி, அந்த பக்கங்களுக்கு எடுத்து செல்லும் லிங்குகளைக்கொண்டும் அலது நல்ல பக்கங்களுக்கு எந்த லிங்கு எடுத்து செல்லும் என்ற யூகத்தைக்கொண்டும் தேடுதல் செய்தது.கூகிள் அதன் சர்ச் எஞ்சினுக்காக ஒரு மிநிமல் இண்டேர்பேசையும் ஆதரித்தது.இதற்கு மாறாக கூகிளின் போட்டியாளர்கள் சர்ச் என்ஜின்களை ஒரு வெப் போர்டலுக்குள் வடிவமைத்து வெளியிட்டனர்.

2000 ஆண்டுக்குள் யாஹூ இங்க்டோமி சர்ச் என்ஜினை அடித்தளமாகக் கொண்டு தேடுதல் சேவைகளை மேற்கொண்டது.யாஹூ! 2002 ஆண்டில் இங்க்டோமியையும்,2003 ல்ஓவர்டுர்மற்றும் ஆல்டாவிச்டாவையும்) வாங்கியது. ஓவர்டுர்(ஆல்திவெப்பை சொந்தமாகக் கொண்டிருந்தது.2004 ஆம் ஆண்டு வரை யாஹூ, கூகிளின் சேவையை நாடி இருந்தது.எபின்னர் அது தன சொந்த சர்ச் என்ஜினை பல இணைந்த டெக்னாலஜிகளை வாங்கியதன் மூலம் அறிமுகப்படுத்தியது.

மைகிரோசாப்ட் இங்க்டோமியில் இருந்து பெற்ற தேடுதல் முடிவுகளைக்கொண்டு, 1998 ல், முதல் முதலில் MSN சர்ச் அறிமுகப்படுத்தியது (இதே சர்ச் என்ஜின் லைவ் சர்ச்என்ற புதுப்பெயருடனும் வெளிவந்தது)1999- ஆண்டின் முதல் பகுதியில் இந்த சயிட் லுக்ஸ்மார்ட் இலிருந்து எடுத்த பட்டியல்களை இங்க்டோமியில்ருந்த முடிவுகளுடன் இணைத்து வெளியிட்டது. 1999 ல் ஒரு சிறு காலத்திற்கு ஆல்டாவிஸ்டா முடிவுகளும் உபயோகிக்கப்பட்டன.2004 ல் மைகிரோசாப்ட் ஒரு புது முயற்சியை மேற்கொண்டது.அது,msnபோட் என்ற தனது சொந்த வெப் கிராலரை கொண்டு சர்ச் டெக்னாலஜியை உருவகம் செய்தது.

2007 ஆம் ஆண்டின் இறுதியில் கூகிள் உலகிலேயே மிகவும் பிரபலமான ஒரு சர்ச் என்ஜினாக அறிவிக்கப்பட்டது.[6][7] பல நாடுகளின் பிரத்தியேகமான தேவைகளுக்காக வெளிவந்த பல சர்ச் எஞ்சின்கள் இப்பொழுது உலகமெங்கும் மிகவும், முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு;பைடு,சீன மக்கள் குடியரசில் மிகவும் பிரபலமான ஒரு சர்ச் என்ஜினாகும்.

சர்ச் எஞ்சின்கள் செயல்படும் முறை

தொகு

ஒரு சர்ச் என்ஜின் கீழ் கூறப்பட்டுள்ள வரிசை முறைப்படி செயல்படுகிறது

  1. வெப்பில் ஊர்ந்து செல்லுதல் (Web crawling)
  2. அட்டவணை இடுதல் (Indexing)
  3. தேடுதல் (Searching)

பல இணையதள பக்கங்களில் உள்ள தகவல்களை தன்னுள் சேர்த்துவைத்துக் கொள்வதன் மூலம் சர்ச் எஞ்சின்கள் வேலை செய்கின்றன. இந்த தகவல்களை அவை www விலிருந்து நேரடியாக பெற்றுக்கொள்கின்றன.இந்த இணையதளப் பக்கங்கள் வெப் கிராலர் மூலமாக (சில சமயங்களில் ச்பயிடர் என்று அழைக்கப்படுகிறது(சிலந்தி)) தகவல்களை பெற்றுக்கொள்கிறது. இது ஒரு லிங்கை பார்த்தவுடன் தானாகவே இயங்கி அதனை பின் தொடர்ந்து தகவளிப்பேரும் ஒரு வெப் பிரவுசர் ஆகும்.தேவை இல்லாதனவற்றை robots.txt மூலம் நீக்கிகொள்ளலாம் . பின்னர், அட்டவணையாக மாற்ற, ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் தகவல்கள் அலசப் படுகின்றன.(எடுத்துக்காட்டுக்கு: தலைப்புகள் மற்றும் சிறப்பு பகுதிகளிலிருந்து (meta tags) சொற்கள் அட்டவணையிட எடுக்கப்படுகின்றன.பின்னர் வரும் கேள்விகளுக்காக தகவல்கள் இன்டெக்ஸ் டேடா பேசுகளில் சேகரிக்கப்படுகின்றன.கூகிள் போன்ற சில சர்ச் எஞ்சின்கள் கஷே (cache) என்னும் ஒன்றில் தனது மூல பக்கங்களை சேகரித்துக் கொள்கின்றன. இது முழுமையான மூல பக்கமாக இருக்கலாம அல்லது மூலப் பக்கத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம். ஆனால் ஆல்டாவிஸ்டா போன்ற சர்ச் எஞ்சின்கள் ஒவ்வொரு ஒ\பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் சேகரித்துக் கொள்கின்றன.இந்த கஷே பக்கம் எப்பொழுதும் உண்மையான தேடுதலுக்குரிய டெக்ஸ்டை அட்டவநியிட்டு வைத்துக்கொள்கிறது. இதனால் தற்போது உபயோகிக்கும் பக்கத்தில் எதாவுது அப்டேட் நடந்து அந்த பக்கத்தில் தேடுகின்ற சொற்றொடர்கள் இல்லாமல் போகிறது.இதனை எளிமையான லிங்க்ரோட் பிரச்சனை என்று அழைக்கலாம், கூகிள் இதனை சரியாகக் கையாள்வதன் மூலம் அதன் உபயோகத்தைஅதிகரிக்கிறது, இந்த தேடுதலுக்குரிய சொற்றொடர்கள் திரும்பப் பெறுகின்ற வெப் பேசில் இருக்கும் என்பது உபயோகிப்பவரின் எதிர்பார்ப்பு குறைவான ஆச்சர்யத்தின் கோட்பாடை இது ஆதரிக்கிறது ஏனென்றால் உபயோகிப்பவர் தேடுகின்ற சொற்றொடர்கள் திரும்பவும் பெற்ற பக்கங்களில் இருக்கும் என்று பொதுவாக எதிர்பார்ப்பர்.பொருத்தமான தேடலின் அதிகரிப்பு இந்த கஷே பக்கங்களின் உபயோகத்தை இன்னும் பெரிது படுத்திக் காட்டியுள்ளது. இது வேறு எங்குமே கிடைக்காத தகவலையும் கூடாக எளிதாகத் தருகிறது.

ஒருவர் ஒருகேள்வியை சர்ச் என்ஜின் குள் புகுத்தும் போது (முக்கிய வார்த்தைகளை), அந்த என்ஜின் இண்டேக்சை பரிசோதனை செய்கிறது மற்றும் மிகப்பொருத்தமான வெப் பேஜ்களின் பட்டியலையும் தருகிறது.இது பொதுவாக ஒரு சுருக்கமான விளக்கத்துடன் கோப்பையின் தலைப்புடன், சில சமயங்களில் கோப்பைக்குள் இருக்கும் சிறு சிறு பகுதிகளுடன் காட்டப்படுகிறது.பெரும்பாலான சர்ச் எஞ்சின்கள்பூலியன் ஆபரேட்டர்களை ஆதரிக்கின்றன. AND, OR மற்றும் NOT என்ற சொற்களை உபயோகிக்கும் போது தேடுதல் கேள்வி இன்னும் சீராகிறது.சில சர்ச் எஞ்சின்கள் அருகாமைத் தேடலுக்கு வழி வகுத்துத் தருகின்றன. இது முக்கிய வார்த்தைகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை நிர்ணயம் செய்ய உதவுகிறது.

ஒரு சர்ச் எஞ்சினின் உபயோகம் அது தரும் பொருத்தமான முடிவு குழுவைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுத்தப் படுகிறது.ஒரு சொல் அல்லது சொல் தொடரை கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைய தளப்பக்கங்கள் இருந்தாலும் சில பக்கங்களில் அந்த சொற்கள் மற்றவைகளைக்காட்டிலும் மிக பொருத்தமாக இருக்கக் கூடும்.பெரும்பாலான சர்ச் எஞ்சின்கள் சிறப்பான முடிவுகளைப்பெற முதலில் இந்த முடிவுகளை வரிசைப் படுத்துகின்றன.அந்த வரிசையில் முடிவுகள் காட்டப்படிகின்றது என்பதையும் அது மிகப்பொருத்தமான முடிவு என்பதையும் இந்த சர்ச் எஞ்சிங்கலேயே முடிவு செய்கின்றன.இந்த வரிசைகள் ஒவ்வொரு சர்ச் எஞ்சினுக்கும் மாறும்.இந்த முறையும் காலத்துக்கு ஏற்றவாறு மாறுகின்றது. புதிதாக வரும் முறைகள் கையாளப்படுகின்றன.

பெரும்பாலான சர்ச் எஞ்சின்கள் வாணிக நோக்குடன் செயல்படுவதால் அவை விளம்பரம் செய்யும் வருமானம் கொண்டு நிலைக்கின்றன. சில சர்ச் எஞ்சின்கள் விளம்பரதாரர்களிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு பட்டியல்களை வரிசைப்படுத்துகின்றன. இப்படி செயல் படாத சர்ச் எஞ்சின்கள் தேடுதலுக்கு தொடர்புடைய விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுகின்றன.இந்த விளம்பரங்கள் வழக்கமான தேடுதல் முடிவுகளோடு காட்டப்படுகின்றன.இந்த விளம்பரத்தில் எவராவது கிளிக் செய்யும் ஒவ்வொரு முறைக்கும் சர்ச் எஞ்சின்கள் பணம் சம்பாதிக்கின்றன.

2008 ஆம் ஆண்டில் இந்த வெப் சர்ச் போர்டல் தொழிலில் வருமானம் 13.4 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பரோட்பேண்ட் தொடர்புகள் மூலம் இது 15.1 சதவிகிதம் கூட உயரலாம்.2008 இலிருந்து 2012 வரை தொழில் வருமானம் 56 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்து இணையதளத்தின் ஊடுருவல் அமெரிக்க வீடுகளில் இன்னும் திகட்டலை ஏற்படுத்தவில்லை என்பதை நம்மால் உணர முடிகிறது.பரோட்பேண்ட் சேவைகள் மூலம் வீடுகளில் இணையதளத்தை உபயோகிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது 2012 ல் 118.7 மில்லியனாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பைபர் ஆப்டிக் மற்றும் ஹை ஸ்பீட் கபெல்கள் மூலம் சாத்தியமாகிறது.[8]

கூடுதல் பார்வைக்கு

தொகு

குறிப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு

இந்த குறிப்புகள் மேலுள்ள வாக்கியங்களின் ஆதரவுக்காக தரப்பட்டுள்ளது.சில உண்மைகள் சில நிறுவங்களின் சொத்து ரகசியங்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் இதற்கு எழுத்து வடிவில் எந்த ஆதாரமும் இல்லை. பொதுவாக பரவி இருக்கும் செய்திகளை உண்மை என்று கருதக்கூடும் இடம் இது.

  • GBMW: 30 நாள் தண்டனைப்பற்றிய அறிக்கை, re: BMW என்ற கார் உருவாகும் நிறுவனம், அதன் ஜேர்மன் வெப்சைட் bmw.de யை கூகிலிருந்து Slashdot-BMW மூலம் நீக்கியது. (05-பிப்-2006).
  • INSIZ: MSN/கூகிள்/யாஹூ வால் மதிப்பிடப் பட்டிருக்கும் இணையதளப் பக்கத்தின் அதிகப்பட்ச அளவு

! ("100-kb limit"): Max Page-size (28-Apr-2006).

  1. http://www.w3.org/History/19921103-hypertext/hypertext/DataSources/WWW/Servers.html
  2. http://home.mcom.com/home/whatsnew/whats_new_0294.html
  3. 3.0 3.1 இந்த சொல் ஆர்கிவ் (archive) என்ற ஆங்கில சொல்லிளுருந்து பிறந்தது. இதிலிருக்கும் 'v' எழுத்தை நிராகரித்து விட்டு ஆர்ச்சி என்று பெயரிட்டனர்.
  4. [
  5. Gandal, Neil (2001). "The dynamics of competition in the internet search engine market". International Journal of Industrial Organization 19 (7): 1103–1117. doi:10.1016/S0167-7187(01)00065-0. https://archive.org/details/sim_international-journal-of-industrial-organization_2001-07_19_7/page/1103. 
  6. "நீல்சன் நெட் ரேடிங்க்ஸ்:ஆகஸ்ட் 2007 சர்ச் ஷேர் கூகிளை முதல் இடத்தில் வைக்கிறது, மைக்கிரோசாப்ட் ஹோல்டிங் கெயின்ஸ்". Archived from the original on 2008-09-12. பார்க்கப்பட்ட நாள் 2009-08-12.
  7. "காம்ஸ்கோர்: ஆகஸ்ட் 2007, கூகிள் வேர்ல்ட் வைட் சர்ச் என்ஜின்களில் முதல் இடம் பிடிக்கிறது; பைடு மைக்கிரோசாப்டை பின் தள்ளுகிறது". Archived from the original on 2008-09-27. பார்க்கப்பட்ட நாள் 2009-08-12.
  8. மார்ச் 2008, தி ரேசெஷன் லிஸ்ட் – டாப் 10 இண்டஸ்ட்ரீஸ் டு பளை அண்ட் பலாப் இன் 2008[தொடர்பிழந்த இணைப்பு]

விபரத்தொகுப்பு

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைத்_தேடல்_பொறி&oldid=3792203" இலிருந்து மீள்விக்கப்பட்டது