வலையகம் இணைந்த சேமிப்பகம்
வலையகம் இணைந்த சேமிப்பகம்(NAS = Network-attached storage) என்பது வேறுபட்ட வன்பொருட்களைக் கொண்ட கணியக்கருவிகளுக்கான தரவுகளை, அக்கருவிகளிடமிருந்து பெற்று, அவை கேட்கப்படும் போது, குறைந்தது இருமடங்கு வேகத்தில் தரம் குறையாமல் அளிக்க வல்ல, வலையகத்தில் இணைக்கப்பட்ட சேமிக்கும் கலன் ஆகும். சேமிப்பு பரப்பு வலையமைப்பு (SAN) என்பதும், இதுவும் ஒன்றல்ல. ஒரு இணைய வழங்கியை விட கோப்புகளைத் தருவதிலும், பெறுவதிலும், அளிப்பதிலும் பாதுகாப்பும், விரைவுத் தன்மையும் இத்தகைய சேமிக்கும் கலன்கள் பெற்றுத் திகழ்வதாகக் கூறப்படுகிறது.[1] இதன் வன்தட்டு இதற்கே உரிய வன்பொருள் தன்மைகளோடும், மென்பொருட்களோடும் செயற்படுகிறது. அதனால் இதன் திறனும், மின்சாரமும், ஆயுளும் மேலோங்கி இருக்கின்றன.[2] NAS எதிர் SAN: NAS கோப்பு பயன்பாடு எல்லைகள் அற்றது. SAN பயன்பாட்டு எல்லைகள் உடையது.NAS என்பதன் இயக்குதளம் பெறும் கணினையைப் பொறுத்து வேறுபடலாம். SAN என்பதன் இயக்குதளம் மாறுவதில்லை. எனவே, இத்தகைய சேமிப்புகலன்களை தொழினுட்ப வல்லுனர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சிறந்த லினக்சு வழங்கல்கள்
தொகுலினக்சில், இத்தகைய கோப்பு மேலாண்மையை வழங்கும், சிறந்த வலையகம் இணைந்த சேமிப்பகங்கள் என நான்கினைக் கூறலாம்.[3]
- அமெகி (Amahi)
- ஓபன்மீடியாவால்ட்டு (OpenMediaVault)
- இராக்சுடோர்(Rockstor)
- ஓபன்ஃபைலர் (Openfiler)
பெருந்தரவுகள் வளர்ந்து வரும் இச்சூழலில், இத்தகைய வன்பொருட்கள் மிக முக்கியபங்கையும், பாதுகாப்பையும் வழங்குகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ InfoStor. NAS Advantages: A VARs View, April 01, 1998. By Ron Levine.
- ↑ seagate.com
- ↑ https://www.maketecheasier.com/nas-solutions-linux/?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=18012018