வலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்/3
புடைவை, புடவை, அல்லது சேலை (அ) "'சீலை'" (sari) என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் முதலிய நாடுகளின் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளிலும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறையே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது. |