வலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்
இது விக்கிப்பீடியாவிலுள்ள சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து விக்கிப்பீடியா இந்திய வலைவாசலில் காட்சிபடுத்தும் திட்டமாகும்.
இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்திய வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்புப் படம் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.
தாங்களும் இந்திய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்பு படத்தினை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)
வடிவ உள்ளீடு
தொகு{{வலைவாசல்:இந்தியா/சிறப்பு படம் வடிவமைப்பு |image= |size=350 |colsize=350 |credit=படம்: [[:commons:User:|]] |caption= }}
காப்பகம்
தொகு1
தொகுவலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்/1
இந்தியாவின் மக்கள்தொகை அடர்த்தியைக் காட்டும் நிலப்படம். படம்:User:Planemad |
2
தொகுவலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்/2
மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகிறது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும் |
3
தொகுவலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்/3
புடைவை, புடவை, அல்லது சேலை (அ) "'சீலை'" (sari) என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் முதலிய நாடுகளின் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளிலும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறையே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது. |
4
தொகுவலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்/4
வடை பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். இலங்கை, தென்னிந்தியா மக்கள் பலரும் வடையை விரும்பி உண்பர். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். உளுத்தம் பருப்பில் செய்யும் வடையை உளுந்து வடை என்றும் மென்மையாக இருப்பதால் மெதுவடை என்றும் அழைப்பர். கடலைப் பருப்பில் செய்வதை பருப்பு வடை, கடலை வடை, மசாலா வடை என்றும் அழைப்பர். இந்து மதத்தில் அனுமாருக்கு வடை மாலை சாத்துவது சிறப்பு. |
5
தொகுவலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்/5
தமிழ்நாட்டில் நரிக்குறவர் சமூகத்தினர் பல ஊர்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக நாடோடிகளைப் போல் அவ்வப்போது இடம் பெயர்ந்து கொண்டிருப்பர். இவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி, போன்ற சிறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர். குறவர்கள் சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் அறிந்தவர்கள். நாடி பார்த்து நோய்க்குறி சொல்லுவார்கள். இன்றைய நவீன மருத்துவம் வந்ததும் இவர்களை ஏமாற்றுக்காரர்களாக சமூகம் சொல்லுகின்றது. குறத்தி குறி சோசியம் இலக்கிய காலத்திலிருந்து பெருமை வாய்ந்தது. |
6
தொகுவலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்/6
மும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange) ஆசியாவின் மிகப் பழைய பங்குச் சந்தையாகும். அது இந்தியாவின் மும்பையின் தலால் வீதியில் அமைந்துள்ளது. இது 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆசியாவில் 4வது மேலும் உலகின் 8வது பெரிய பங்குச் சந்தை. ஏறத்தாழ 3500 நிறுவனங்களின் பங்குகள் நிரற் படுத்தப்பட்டுள்ளன. |
7
தொகுவலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்/7
இந்திய நாடாளுமன்றம் அல்லது இந்தியப் பாராளுமன்றம், இரு சட்ட அவைகளை கொண்டுள்ளது. அவை மாநிலங்களவை (en:Rajya Sabha) மற்றும் மக்களவை (en:Lok Sabha) ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது. |
8
தொகுவலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்/8
கங்கை இந்தியாவின் முக்கிய ஆறாகும். இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது. பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை ஆறு மொத்தம் 2525 கி.மீ ஓடுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும். |
9
தொகுவலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்/9
அசோகச் சக்கரம் அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் ஓர் 24 கோல்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். இது பௌத்தர்களின் எட்டு கோல்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோக சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற சாரநாத்தில் உள்ள சிங்க தலைகள் பதித்த அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் இந்திய தேசியக் கொடியில் மையப்பகுதியில் கடற்படை நீலத்தில் இடம் பெற்றுள்ளது. அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்திய அரசு |
10
தொகுவலைவாசல்:இந்தியா/சிறப்புப் படம்/10
பாரத ரத்னா இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும் இவ்விருதை பெரும் வகையில் நவம்பர், 2011ல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. |