வலைவாசல்:இந்து சமயம்/அறிமுகம்

ஓம்
ஓம்

இந்து சமயம் (Hinduism) என்பது இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றாகும். இச்சமயம் சைவம், வைணவம்,சாக்தம்,கௌமாரம்,சௌரம்,காணாபத்தியம் முதலிய பிரிவுகளை உள்ளடக்கியதாகும். ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. இந்தியாவில் பெரும்பாலான இந்துக்கள் வசித்தாலும் நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.

இந்து சமயம் பற்றி மேலும் அறிய...

குறிப்பு. அறிமுக பக்கத்தில் இடம்பெறும் படிமங்கள் இங்கு உள்ளன.