வலைவாசல்:இந்து சமயம்/இந்து சமய கடவுள்கள்/1
அக்னி தேவன் இந்துக்களால் வணக்கப்படும் தெய்வம். இவர் தேவர்களின் புரோகிதராக ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறார். அக்னி தேவனுக்கு மூன்று உருவங்கள் உண்டு: நெருப்பு, மின்னல், சூரியன். சூரியனின் ஆற்றலாக அக்னி தேவன் விளங்குகிறார்.
இவர் வேதங்களில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றார். நெருப்பின் அதிபதியான இவர் நெருப்பில் இடப்படும் நிவேதனங்களை ஏற்றுக்கொள்பவராக உள்ளார். வேள்விகளில் இடப்படும் நிவேதனங்களை மற்ற தெய்வங்களுக்கு அக்னி தேவனே எடுத்துச்செல்கிறார். அக்னி மற்ற தேவர்களைப் போல என்றும் இளமை உடையவராக கருதப்படுகிறார்.
இவர் தானாக பிறந்ததை குறிக்கும் வகையில், குச்சிகளை ஒன்றின் மீது ஒன்று வைத்து கடைந்து நெருப்பை உருவாக்கும் அக்னிமத்தனம் சில இந்து சடங்குகளில் மேற்கொள்ளப்படுகிறது.