வலைவாசல்:இயற்பியல்/சிறப்புப் படங்கள்/செவ்வாய்
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, பூமியிலிருந்து காண்கையில் சூரியனும் நிலவும் வான் இணையலில்(conjunction) இருந்தால் சூரிய கிரகணம் (Solar Eclipse) ஏற்படும். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். முதலாவது முழு சூரிய கிரகணம் என்றும் பின்னர் கூறப்பட்டது பகுதி சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகின்றது. புவியைப் பொருத்தவரை ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும்; இதில் இரண்டு கிரகணங்கள் வரை முழு சூரிய கிரகணங்களாக அமையலாம் -- சில ஆண்டுகள் முழு கிரகணம் ஒன்று கூட ஏற்படாமலும் போகலாம்.